
திற நுண்ணுயிரி (இ.எம்) தொழில்நுட்பம்: இயற்கை விவசாயத்தில் சில சில உயிரினங்கள் பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அல்லது வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன. இயற்கை விவசாயத்தில் பயன்படும் பல கொதித்த கரைசல்களால் உள்ள நுண்ணுயிரிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.
நல்ல விவசாய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கி அதன் மூலம் தீய நுண்ணுயிரிகளால் ஏற்படும் மோசமான விளைவுகளை குறைக்க உதவும். ஜப்பானிய விவசாயப் பேராசிரியரான டீயூரா நுண்ணுயிரிகள் ஒன்றாக இணைந்து செயல்புரிந்து மண்ணின் வளத்தை மேம்படுத்துவதை உணர்ந்தவர். இயற்கையில் உள்ள பல நுண்ணுயிரிகள் ஒன்றாக இணைந்து பயிர் வளர்ச்சிக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்தவர். அதற்கு 'திற நுண்ணுயிரிகள்' என்று பெயர் சூட்டினார்.
திற நுண்ணுயிர்களில் ஏறத்தாழ 80 -100 வகையான நுண்ணுயிரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டாலும் குறிப்பிட்ட 3 நுண்ணுயிரிகள் நன்மை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
* லாக்டிக் அமிலத்தை உண்டாக்கும் பாக்டீரியா (தயிரில் உள்ள பாக்டீரியா)
* ஈஸ்ட் (ரொட்டி, இட்லியில் உள்ளது)
* ஒளிச்சேர்க்கை பாக்டீரியா
இத்தகைய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ஒன்றாக கலந்து 12 மாதம் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். திற நுண்ணுயிரி தொழில்நுட்பம் ஏறத்தாழ 150 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 2000ம் ஆண்டு முதல் திற நுண்ணுயிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடைகளில் கிடைக்கக்கூடிய திற நுண்ணுயிரி இ.எம்.1 என்று அழைக்கப்படுகிறது. இ.எம்.1ல் உள்ள நுண்ணுயிரிகள் இயக்கமற்று காணப்படும். அவற்றை இயங்கச் செய்வதற்கு இ.எம்.1 உடன் சர்க்கரை மற்றும் குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலக்க வேண்டும்.
இ.எம்.1- பங்கு, சர்க்கரை - 1 பங்கு, தண்ணீர் - 18 முதல் 20 பங்கு.
செய்முறை: சர்க்கரையை இளஞ்சூடு உள்ள தண்ணீரில் நன்றாக கரைத்து கலன் முழுவதும் நிரப்பி அதனுடன் இ.எம்.1 கரைசலை சேர்க்க வேண்டும். இந்தக் கரைசலை உணவு கிரேடு பிளாஸ்டிக் கலன்களில் ஒரு வாரத்திற்கு மூடி வைக்க வேண்டும். 7 நாட்களில் பெருக்கப்பட்ட இ.எம். கரைசல் தயாராகி வரும் இந்த இனிப்புடன் கூடிய புளிப்புச் சுவையுடனும் உள்ள அதன் கார அமிலத்தன்மை 4 க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
அரிசி களைந்த நீரை உபயோகப்படுத்தி பெருக்கப்பட்ட இ.எம். கரைசலை (3 பங்கு இ.எம்.1, இரண்டு பங்கு சர்க்கரை மற்றும் 95 பங்கு அரிசி களைந்த நீர்) தயாரிக்கலாம். இ.எம்.1 கரைசலை 6 முதல் 12 மாதம் வரை வைத்திருக்க முடியும். இயக்கப்பட்ட இ.எம். கரைசலை 4 முதல் 5 மாதத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.
கழிவுநீர் மேலாண்மை அல்லது மாசுபடுத்தப்பட்ட நீர் நிலைகளைச் சுத்தப்படுத்த இ.எம். மண் பொக்காசி உருண்டைகளால் பயன்படுத்தப்படுகிறது.
எரு (கம்போஸ்ட்) தயாரிப்பில் பெருக்கப்பட்ட இ.எம்.கரைசலின் உபயோகம்: இதில் 3 வகைகள் உள்ளன.
* வீடு மற்றும் பெரிய உணவகங்கள்
* பெரிய தோட்டங்கள் மற்றும் பண்ணைகள்
* நகராட்சி மற்றும் பெரிய நிறுவனங்களில் எரு தயாரிக்கும் இடங்கள்
இதில், பெரிய தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் எருவாக மாற்றுவதற்கு ஏதுவான பண்ணைக்கழிவுகள் அதிகம் காணப்படும். சிறந்த எரு தயாரிப்பதற்கு 1 டன் பண்ணைக்கழிவுகள், 5-10 லிட்டர் பெருக்கப்பட்ட இ.எம். கரைசலை உபயோகிக்க வேண்டும். பண்ணைக்கழிவு குவியல்களில் ஒன்று அல்லது இரண்டு முறை அதாவது ஆரம்பத்திலும் மற்றும் குவியலை புரட்டிப்போடும் போதும் பெருக்கப்பட்ட இ.எம். கரைசலின் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டும். பண்ணைக்குவியல் அடிக்கடி புரட்டிப்போட தேவையில்லை. இரண்டு வாரத்தில் எரு தயாராகிவிடும்.
இ.எம்.தொழில்நுட்பம் எளிமையானது. பாதுகாப்பானது. செலவு குறைந்த தொழில்நுட்பமாகும். இது மண், பயிர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை வளப்படுத்தவும், நோயை கட்டுப்படுத்தவும், பயன்படக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்பமாகும்.
பயிர்களின் மகசூலை அதிகரிப்பது, விளைபொருட்களின் தரத்தை உயர்த்துவது ஆகியவை இந்த தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளாகும் மண்ணில் அமைப்பு மண்ணின் உறிஞ்சு தன்மை மற்றும் கார்பன் அளவு ஆகியவையும் அதிகரிக்கின்றன. (தகவல்: ஆங்கிலத்தில்: எம்.சுகுணா ஸ்ரீ, ஐதராபாத். மின்னஞ்சல்: sugunasrimaddala@yahoo.com
தமிழில்: எம்.எஸ்.இராமலிங்கம், உதவி இயக்குனர் ஸ்பைசஸ் போர்டு, செல்: 095477 06905, ஸ்பைசஸ் இந்தியா, மணம் 26, சுகம் 11, நவம்பர் 2013, ஸ்பைசஸ் போர்டு, கொச்சின் - 682 025).
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

