sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : நவ 05, 2014

Google News

PUBLISHED ON : நவ 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெத்தைலோ பாக்டீரியா நுண்ணுயிர் உரம்: இலைகளின் மேற்புறத்திலும் உட்புறத்திலும் வாழும் பாக்டீரியாக்களில் மெத்தைலோ பாக்டீரியா என்றும் நன்மை செய்யும் பாக்டீரியா மிக முக்கியமானது. இப்பாக்டீரியா செடிகளின் இலைப்பரப்பிலும் வேர் மண்டலத்திலும் காற்று, தண்ணீர், மண், கல் அனைத்து இடங்களிலும் (காற்று போகாத இடங்கள் தவிர) காணப்படுகிறது.

இலைகளில் வேதியல் கூறுகள் மூலம் பல கரிமப்பொருள்கள் உருவாகின்றன. அவைகளில் மெத்தனால் என்னும் கரிமப்பொருள் முக்கியம் வாய்ந்தது. இந்த மெத்தனால் இலைகளில் பெக்டின் எனப்படும் கரிமப்பொருள் உயிர்வேதியல் முறையில் சிதைவடையும் போது உருவாகிறது. மெத்தைலோ பாக்டீரியா இலைகளில் இருப்பதால் ஸ்டொமேட்டா மூலம் வெளியாகும் இந்த மெத்தனாலை உணவாக உட்கொண்டு வாழ்கிறது.

மாறாக மெத்தைலோ பாக்டீரியா செடிகளுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் ஆக்ஸின்களை அளிப்பதன் மூலம் செடிகள் நன்கு வளர்ச்சியடைகின்றன. பிபிஎப்எம்ஐ திரவ நுண்ணுயிர் உரமாக பயன்படுத்தலாம். இந்த பாக்டீரியா ஆய்வகத்தில் வளரும்போது இளஞ் சிவப்பு நிறம் உடையதாக இருப்பதால் இது பொதுவாக பிபிஎப்எம் என்று அழைக்கப்படுகிறது. விதைகளை நடுவதற்கு முன்பாக விதைகளின் கடினத் தன்மையைப் பொறுத்து பிபிஎப்எம் நுண்ணுயிர் திரவ கரைசலில் 5 முதல் 15 நிமிடம் நன்கு ஊறவைத்து பின்பு நிழலில் 15 நிமிடம் உலர வைத்து நடுவதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் நாற்றுக்களின் வீரியம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. மேலும் விதைகளின் முளைப்புக் காலம் ஒன்று முதல் இரண்டு நாட்கள் குறைக்கப்படுகிறது.

பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் உரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், பயிர்களின் வளர்ச்சி, வளர்ச்சி காலம், பூக்கும் காலம், காய்க்கும் காலம் 5 முதல் 7 நாட்கள் வரை குறைக்கப்படுகிறது. மேலும் காய்கள், பூக்கள், பழங்களின் நிறம், திடம், பருமன் அதிகரிக்கிறது. பூ, காய் பிடிக்கும் பருவத்தில் பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பூக்கள், காய்கள் உதிர்வதைத் தடுக்கலாம்.

தென்னை, மா, கொய்யா, பப்பாளி, முருங்கை, மாதுளை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலமாக வேர்களுக்கு சென்று அடையுமாறு கொடுக்கலாம். அல்லது கைத்தெளிப்பான் அல்லது விதைத் தெளிப்பானைக் கொண்டு கைக்கு எட்டும் உயரம் வரை இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.

நீர்ப்பற்றாக்குறை அல்லது வறட்சியால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பயிர்கள் நீரின் தேவையின்றி 5 முதல் 10 நாட்கள் வரை (மண்ணின் ஈரப்பதம் பொறுத்து) வாடாமல் வறட்சியைத் தாங்கும் தன்மையைப் பெறுகின்றன. இந்த பிபிஎப்எம் ஐ இயற்கை பயிர் ஊக்கி என்றும் அழைக்கலாம். இந்த திரவ நுண்ணுயிர் உரத்தை உபயோகிக்கும் போது ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி ஆகியவற்றை சேர்க்க தேவையில்லை.

காவிரிடெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது 1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் வாடிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 200மிலி பிபிஎப்எம் ஐ 200 லிட்டர் நீர் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் சென்ற ஆண்டு தெளிக்கப்பட்டதில் நெற்பயிர் 10 முதல் 15 நாட்கள் வரை தண்ணீர் இல்லாத நிலையிலும் வறட்சியை தாங்கும் தன்மை பெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் நுண்ணுயிரியல் துறையில் போர்க்கால அடிப்படையில் 25 ஆயிரம் லிட்டர் பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் உரம் உற்பத்தி செய்து காவிரிடெல்டா பகுதியிலுள்ள நெற்பயிர்களுக்கு தெளித்து பயிர் காப்பாற்றப்பட்டது. (தகவல்: முனைவர் எம்.செந்தில்குமார், முனைவர் எஸ்.குணசேகரன், வேளாண் நுண்ணுயிரியல் துறை, த.வே.ப.கழகம்) கோயம்புத்தூர்-641 013. போன்: 0422 - 661 1294, 661 1394.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us