sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு

/

மல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு

மல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு

மல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு


PUBLISHED ON : நவ 05, 2014

Google News

PUBLISHED ON : நவ 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரே கல்லில் இரண்டு மாங்காய், என்பது போல, சிவகங்கை அருகே விவசாயி ஒருவர், விவசாய பயிர்களுடன், துணை தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சிவகங்கை ஒக்கூரை சேர்ந்தவர் விவசாயி எஸ்.ராமநாதன்,70. இவரது நிலத்தில் கரும்பு, நெல் நடவு செய்துள்ளதோடு, பழத்தோட்ட பண்ணை நடத்துகிறார். குறிப்பாக மல்பெரி செடி வளர்த்து, அதற்கு துணை தொழிலாக பட்டுப்புழு வளர்க்கும் பணியிலும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளார்.

விவசாயி எஸ்.ராமநாதன் கூறியதாவது:

எட்டு ஆண்டுகளாக 3 ஏக்கரில் மல்பெரி செடி வளர்த்து வருகிறேன். மல்பெரி செடியை, பட்டுப்புழுக்களின் வளர்ச்சிக்காக அறுவடை செய்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் துணை தொழிலையும் செய்து வருகிறேன்.

ஏக்கருக்கு மல்பெரி செடி நடவு செய்ய, ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். இதற்கு பட்டு வளர்ச்சித்துறையினர், ரூ.10,500 வரை மானியமாக வழங்குகின்றனர். குறைந்தது 1 முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை மல்பெரி செடி வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது. ஒரு முறை மல்பெரி செடியை நடவு செய்யவேண்டும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு நல்ல தண்ணீர் விட்டு, உரங்கள் இட்டு பராமரிக்க வேண்டும். அதற்கு பின், நன்கு வளர்ந்த மல்பெரி செடி இலைகளை, 65 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டும்.

துணை தொழில்: இந்த செடிகளை எனது நிலத்தில் ஏற்படுத்தியுள்ள பட்டுப்புழு வளர்ப்பு குடோனில் வளரும் புழுக்களுக்கு உணவாக வழங்குவேன். இதன் மூலம், பட்டுப்புழுக்கள் வளர்ந்து, பட்டு நூல் கூடு தயாராகும். இந்த கூட்டினை, பட்டு வளர்ச்சித்துறையினர் எடுத்து சென்று, பட்டு நூல் தயாரிக்க பயன்படுத்துவர். இரண்டு ஏக்கரில் நடவு செய்த, மல்பெரி செடி மூலம் கிடைத்த இலையை போட்டு, பட்டு புழு வளர்த்தால், முட்டை வைத்ததில் இருந்து 23 நாட்கள் கழித்து, 160 கிலோ பட்டுக்கூடு கிடைக்கும். சாதாரணமாகவே, பட்டுக்கூட்டின் விலை கிலோ ரூ.300 வரை விற்கிறது. 2 ஏக்கரில் கிடைக்கும் மல்பெரி செடியின் மூலம், பட்டுக்கூடு வளர்த்து விற்பனை செய்தால் செலவு போக மாதம் ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.

மானியம்: பட்டுப்புழு வளர்ப்பு ஷெட்டை 1,500 சதுரடியில் அமைக்க, பட்டுவளர்ச்சித்துறை ரூ.75 ஆயிரம், தளவாட சாமானுக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது தவிர மைசூருவில் இருந்து பட்டுப்புழு முட்டை வாங்கி வர போக்குவரத்து செலவு தொகையாக 50 சதவீதமும் வழங்குகிறது.

ஒட்டு மொத்தத்தில் மல்பெரி செடி வளர்த்து பட்டுப்புழு வளர்ப்பிற்கான ஒட்டு மொத்த செலவில், 20 சதவீதத்தை மட்டுமே விவசாயிகள் செலவழிக்கவேண்டும், என்றார்.

ஆலோசனை பெற 94430 14354ல் தொடர்பு கொள்ளலாம்.

-வெங்கடேசன், சிவகங்கை






      Dinamalar
      Follow us