sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம்

/

பணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம்

பணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம்

பணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம்


PUBLISHED ON : மார் 13, 2019

Google News

PUBLISHED ON : மார் 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிக செலவு செய்யாமல் பணம் மட்டும் தரும் மரங்களை தேர்வு செய்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட பலரும் முனைகிறார்கள். இவற்றில் முக்கியமானது இலவம் பஞ்சு மரம்.

இம்மரங்களை வீட்டில் அல்லது தோட்டத்தில் உள்ள சிறிது இடத்தில் வளர்த்தால் போதும்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கை மேல் பலன் கிடைக்கும். இவ்வகை மரங்களை சில்க் காட்டன், சிங்கப்பூர் கப்பாக், இலவன், ஒலவன், பஞ்சு மரம் என்றும் அழைக்கிறார்கள். 'அற்புத பஞ்சு மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. பல இடங்களில் எளிதில் வளர்க்க உகந்த ஒன்று தான்.

அதிக நிழல் தராத தன்மை உடைய இலவம் மரம் எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். மூட நம்பிக்கைகளை மரம் மேல் திணிக்கும் சிலர், பஞ்சுமரம் வைத்தால் குடும்பம் பஞ்சு பஞ்சாகப் பிரிந்து போகும் என்று தவறான கருத்தை கூறி இம்மரத்தை வளர்த்து அடுத்தவன் பணக்காரன் ஆகக்கூடாது, என்று சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

ஏற்றுமதிக்கு உறுதுணையான 'பஞ்சு' இலவம் பஞ்சு. ஒரு மரம் நல்ல மண்வாகு உள்ள இடத்தில் 2,000 காய்கள் கூட காய்க்கும். நன்கு முதிர்ந்த காய் ஒன்று 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை போகிறது. இருக்கும் இடம் தேடி வியாபாரிகள் படையெடுக்கும் இலவம் மரம் ஏற்றுமதிக்கு போவதே தேனி மாவட்டத்தில் இருந்து தான். ஒரு மரத்தின் பக்கக் கிளைகளை கழித்து 'போத்து' எனப்படும் நேரடி வளர்ப்பு உத்தியின் மூலம் ஏராளமான மரங்களை (3 முதல் 4 அடி வரை உள்ள 3 செ.மீ., முதல் 10 செ.மீ., வரை பருமன் உடைய கவாத்து செய்யப்பட்ட கிளைகள் மூலம்) உற்பத்தி செய்யலாம். முதல் தரமான காய்களின் விதைகளையும் பாலித்தீன் பைகளில் வளர்த்து கன்றுகளை உருவாக்கலாம். வனத்துறை, பசுமை விழிப்புணர்வு குறிக்கோள் கொண்ட தொண்டு நிறுவனங்கள், ஈஷா அறக்கட்டளை மற்றும் தனியார் நாற்று பண்ணைகளில் எளிதில் கிடைக்கும்.

ஒரு கிலோ பஞ்சுக்காய் விதையில் 15 ஆயிரம் செடிகள் உற்பத்தி செய்யலாம். மூன்று மாதம் வளர்த்து அதனை 6 மீட்டருக்கு 6 மீட்டர் இடை வெளியில் அல்லது வரப்பு ஓரம், வேலிகள், சரிவுப் பகுதி வாய்க்கால் கரை ஓரம், தென்னையில் ஊடுபயிர், மாந்தோப்பில் கலப்புப்பயிர் என எந்த இடத்திலும் வளர்த்து லாபம் ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு 100 கன்றுகள் போதும்.

செம்டம்பர், அக்டோபர் மாதம் பூ பூத்து மார்ச், ஏப்ரலில் காப்புக்கு தயாராக இருக்கும். பணம் காய்க்கும் இலவம் மரத்தை வளர்த்து அதிக லாபம் ஈட்ட விவசாயிகள் முன் வர வேண்டும்.

தொடர்புக்கு 98420 07125.

- டாக்டர் பா.இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர், தேனி







      Dinamalar
      Follow us