தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/தழைச்சத்து பயன்படுத்தி மைசூர் மல்லி நெல் சாகுபடி

தழைச்சத்து பயன்படுத்தி மைசூர் மல்லி நெல் சாகுபடி

தழைச்சத்து பயன்படுத்தி மைசூர் மல்லி நெல் சாகுபடி


PUBLISHED ON : பிப் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூர் மல்லி ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சி புரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:

பலவித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மைசூர் மல்லி ரக நெல்லை நேரடி விதைப்பு மூலமாக சாகுபடி செய்துள்ளேன். இது, 120 நாளில் மகசூலுக்கு வரும் சன்ன ரகமாகும்.

ரசாயன உரங்கள் இன்றி சாகுபடி செய்தால், ஏக்கருக்கு 15 நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும். நான் சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என, யூரியா உரத்தை பயன்படுத்தாமல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்தி, மைசூர் மல்லி ரக நெல்லை சாகுபடி செய்துள்ளேன்.

என்னுடைய வண்டல் மண் நிலத்திற்கு நன்றாக மகசூல் கொடுக்கும். குறிப்பாக, ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைக்கும் அதிகமாக மகசூல் கொடுக்கும். இதை அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: ஆர்.தேவராஜ், 87547 97918.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us