/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மா மரத்தில் பூக்கள் உதிர்வதை வேம்பு கரைசலால் தடுக்கலாம்
/
மா மரத்தில் பூக்கள் உதிர்வதை வேம்பு கரைசலால் தடுக்கலாம்
மா மரத்தில் பூக்கள் உதிர்வதை வேம்பு கரைசலால் தடுக்கலாம்
மா மரத்தில் பூக்கள் உதிர்வதை வேம்பு கரைசலால் தடுக்கலாம்
PUBLISHED ON : பிப் 25, 2026

மா மரத்தில் பூக்கள் உதிர்வதை தடுக்கும் முறை குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள், மரக்கன்றுகள் சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், சேலம் பெங்களூரா, கோட்டூர் கோணம் உள்ளிட்ட பல்வேறு விதமான மா ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த மா மரங்களில் பூ எடுக்கும் போது, பூக்கள் மற்றும் பிஞ்சுகள் அதிகளவில் உதிர்ந்து விடுகின்றன. இதனால், மா சாகுபடியில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க, மாம்பூ எடுக்கும் போது, வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். இயற்கை உயிர் உர கரைசலை தெளிக்க வேண்டும்.
குறிப்பாக, மாம்பூ எடுக்கும் போது ஒரு முறை தெளிக்க வேண்டும். மா பிஞ்சுகள் நெல்லிக்காய் அளவிற்கு வரும் போது ஒரு முறை தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளித்தால், மா சாகுபடியில் பூ உதிர்வதை தடுப்பதோடு, பழத்தில் ஈக்களின் தொல்லையும் அதிகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.

