/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நல்ல வருவாய்க்கு நிலம்பூர் தேக்கு சாகுபடி
/
நல்ல வருவாய்க்கு நிலம்பூர் தேக்கு சாகுபடி
PUBLISHED ON : டிச 10, 2025

நிலம்பூர் தேக்கு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த, விவசாயத்தில் டிப்ளமா படித்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பல வித பழங்கள், மரக்கன்று கள் சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், நிலம்பூர் தேக்கு சாகுபடி செய்யலாம். இந்த தேக்கு மரம் செங்குத்தாக வளரக்கூடிய மரம். மகாகனி மரத்தைவிட செங்குத்தாக வளரும். நாட்டு தேக்கு மரக்கன்றுகளில், பக்கவாட்டு கிளைகள் அதிகமாக இருக்கும். நிலம்பூர் தேக்கு மரத்தில், பக்கவாட்டு கிளைகள் இருக்காது.
இந்த நிலம்பூர் தேக்கு மரத்தின் இலை 2 அடி நீளமும், 2 அடி அகலமும் இருக்கும். மேலும், தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தினால், 25 ஆண்டுகளுக்கு பின் மரம் அறுவடை செய்யும்போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400 .

