/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தடையில்லாத வருவாய்க்கு ஆல் சீசன் கொய்யா சாகுபடி
/
தடையில்லாத வருவாய்க்கு ஆல் சீசன் கொய்யா சாகுபடி
PUBLISHED ON : டிச 10, 2025

ஆல் சீசன் கொய்யா குறித்து, திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ். தங்கவேல் கூறியதாவது:
களிமண் நிலத்தில், ஹர்கா கிரேன் கொய்யா, இளஞ் சிவப்பு நிற கொய்யா, ஆல் சீசன் கொய்யா உள்ளிட்ட பல வித கொய்யா ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த ரக கொய்யாவில், நல்ல மகசூல் எடுக்க முடிகிறது. அதற்கேற்ப, கொய்யா தோட்டத்தில், தண்ணீர் தேங்காதவாறு, வடிநீர் கால்வாய் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கொய்யா மகசூல் எடுத்து முடிந்த பின், மீண்டும் பூ பூத்து, காய்கள் காய்க்கின்றன. எங்கள் கொய்யா தோட்டத்தை பொருத்தவரை, எப்போதும் கொய்யா இருக்கும் வகையில், மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. வருவாய்க்கும் பஞ்சமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.தங்கவேல், 73976 63454.

