sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற குறுகியகால சன்ன நெல் ரகம் என்.எல்.ஆர்.34449

/

மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற குறுகியகால சன்ன நெல் ரகம் என்.எல்.ஆர்.34449

மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற குறுகியகால சன்ன நெல் ரகம் என்.எல்.ஆர்.34449

மூன்று பட்டங்களுக்கும் ஏற்ற குறுகியகால சன்ன நெல் ரகம் என்.எல்.ஆர்.34449


PUBLISHED ON : ஏப் 04, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆந்திரா, நெல்லூர் ஆராய்ச்சி நிலையத்தில் சாப்பாட்டிற்கும், பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்றதுமான நெல் ரகங்கள் பல உள்ளன. ஆனால் இவைகளின் வயது கூடுதலானது. இவைகளை மூன்று பட்டங்களிலும் சாகுபடி செய்ய இயலாது. இச்சூழ்நிலையில் என்.எல்.ஆர்.34449 நெல் ரகம் அனைத்து விவசாயிகள் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இந்த ரகத்தின் நெல் மிகவும் சன்னமாக உள்ளது. மேலும் இதன் அரிசி சாப்பாட்டிற்கும் பலகாரங்கள் (இட்லி, தோசை) செய்வதற்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த ரகத்தை குறுவை, தாளடி, சம்பா போன்ற பட்டங்களிலும் சாகுபடி செய்ய இயலும். மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்னும் விவசாயி (94868 22948) நெல் சாகுபடியில் ஓர் வல்லுனர். இவரது சாகுபடி நிலம் மதுரையில் சோழவந்தான் அருகில் நெடுங்குளம் கிராமத்தில் உள்ளது. இவர் தொடர்ந்து ஆடுதுறை நெல் ரகங்களை சாகுபடி செய்து பலன் அடைந்து வருகிறார். அதோடு என்.எல்.ஆர்.34449 நெல் ரகத்தையும் சாகுபடி செய்துவருகிறார். பல விவசாயிகள் சங்கரலிங்கம் என்.எல்.ஆர். 34449 நெல்லினை சாகுபடி செய்துவருவதை நேரில் கண்டு இந்த ரகத்தின் முழு விவரத்தையும் சொல்லுங்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டு அவர்களும் இந்த ரகத்தை சாகுபடி செய்யத் துவங்கிவிட்டனர். சங்கரலிங்கம் கிராமம் முழுவதும் இந்த ரகம் பரவிவிட்டது. சங்கரலிங்கம் விவசாயிகளுக்கு இந்த ரகத்தின் சிறப்பினை உணர்த்த இதன் சாகுபடிசெலவு, வரவு விவரத்தை விளக்கி வருகிறார்.

சாகுபடிசெலவு - வரவு: ரூ.பை

விதை நெல் 30 கிலோ - 600.00

இரண்டு உழவு ரோட்டோவேட்டர் - 4,800.00

நாற்று பாவ - 500.00

வரப்பு வெட்ட - 600.00

பரம்பு - 200.00

காம்ப்ளக்ஸ் உரம் 2 மூடை - 1,400.00

நடவு கூலி - 1,250.00

முதல் மேலுரம் யூரியா 25 கிலோ - 500.00

இரண்டாவது மேலுரம்யூரியா 25 கிலோ - 500.00

மூன்றாவது மேலுரம் பொட்டாஷ் 25 கிலோ - 200.00

வயலில் களையெடுப்பு - 500.00

பயிர் பாதுகாப்பு - செலவு இல்லை

நெல் அறுவடை மிஷன் செலவு - 2,000.00

மொத்த செலவு - 13,050.00

ஏக்கர் மகசூல் - 45 மூடை

65 கிலோ மூடை - ரூ.750 வீதம்

45 மூடை விலை - ரூ.33,750

சாகுபடி செலவு - ரூ.13,050

செலவு போக லாபம் - ரூ.20,700

என்.எல்.ஆர்.34449 ரகம் நெல்லூர் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொடிய நோயாகிய 'பிளாஸ்ட்டால்' தாக்கப்படுவதில்லை. இது முக்கியமான குணமாகும். இதன் வயது 125 நாட்கள்தான். உயரம் 60-65 செ.மீ.தான். இப்பயிர் எந்த சூழ்நிலையிலும் கீழே சாய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்.எல்.ஆர்.34449 ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். மூன்று பட்டங்களில் சாகுபடி செய்யலாம். யூரியா உரத்தினை தவணையில் போடவேண்டும். அதிகம் போட்டால் இலைசுருட்டுப்புழு தொல்லை வரும். எக்காரணத்தைக்கொண்டும் பயிர் கீழே சாயாது. இதன் அரிசி சாப்பாட்டிற்கும், பலகாரங்கள் (இட்லி, தோசை) செய்வதற்கும் ஏற்றது. பயிரின் வயது 120 நாட்களே. நெல்லிற்கு நல்ல விலை கிடைக்கின்றது. 65 கிலோ மூடைக்கு விலை ரூ.750. ஏக்கர் மகசூல் சாதாரணமாக ஏக்கருக்கு 45 மூடை வரும். சில விவசாயிகள் 48 மூடை வரை மகசூல் எடுத்துள்ளனர். இதில் வைக்கோலில் வரவு கிடையாது. வைக்கோலை அறுவடை இயந்திரம் சேற்றில் அழுத்திவிடுகிறது. இதனால் மண்வளம் பெருகுகின்றது. இது மாதிரியான நற்பண்புகளைக் கொண்ட என்.எல்.ஆர்.34449 ரகம் விவசாயிகளுக்கு கணிசமான லாபத்தினைக் கொடுக்கும். பல விவசாயிகள் சங்கரலிங்கத்தை அணுகி தாங்களும் இந்த ரகத்தைசாகுபடி செய்ய விவரங்கள் தெரிந்துகொண்டு தங்கள் வயலுக்கு மகிழ்ச்சியாக திரும்புகின்றனர்.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us