/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
/
ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
PUBLISHED ON : ஜன 14, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில், வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தேசிய தேனீ வாரிய நிதியுதவியுடன், ஜன., 19 - 28 வரை, ஏழு வேலை நாட்கள் என, ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீ இனங்களை கண்டறிதல், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் வளர்த்தல், தேன் எடுக்கும் முறை, தேனீயின் தரம் அறிதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு: பெ.முருகன் 99405 42371

