sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

இலைகளின் மூலம் செடி உற்பத்தி

/

இலைகளின் மூலம் செடி உற்பத்தி

இலைகளின் மூலம் செடி உற்பத்தி

இலைகளின் மூலம் செடி உற்பத்தி


PUBLISHED ON : மார் 13, 2013

Google News

PUBLISHED ON : மார் 13, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக செடிகள் விதைகள், கட்டிங்குகள், ஒட்டுக்கட்டுதல் மற்றும் திசுவளர்ப்பு ஆகிய முறைகளிலேயே உருவாக்கப்படுகிறது. இதில் 'திசு வளர்ப்பு' முறை மிகவும் அதிக பொருட்செலவை உள்ளடக்கியது. ஆனால் தரத்தில் உயர்ந்த தொழில் நுட்பத்தைக் கொண்டது.

எங்களின் இந்தத் தொழில்நுட்பம் தரத்தில் திசுவளர்ப்பு முறைக்கு இணையானது. ஆனால் இதற்கு அதிக பொருட்செலவு தேவையில்லை. ஒரு செடியில் உள்ள இலைகளைக் கொண்டே அதன் செடிகளை ஜெராக்ஸ் போல உற்பத்தி செய்யலாம். தரமான தாய் செடிகளில் இருந்து இலைகள் மூலம் செடிகளை உற்பத்தி செய்யும்போது அதன் தரம் உறுதி செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மிகவும் தரமான, விளைச்சல் உறுதி செய்யப்பட்ட நாற்றுக்கள் கிடைக்கும்.

தற்போது சத்தியமங்கலம் பகுதியில் அதிகமாக பயிரிடப்படும் குண்டுமல்லியும், திருச்சி பகுதியில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் இட்லிப்பூ நாற்றுக்களும் இலைகளைக் கொண்டு செடிகளை உற்பத்தி செய்யும் இந்த முறையில் சாத்தியமாகி இருக்கிறது. மற்ற செடிவகைகளை இந்த முறையில் உற்பத்தி செய்யும் எங்களின் முயற்சி தொடரும்.

1998ல் இருந்து எங்கள் நர்சரி, நாற்று உற்பத்தித் தொழிலில் உள்ளது. தரமான, விளைச்சல் உறுதி செய்யப் பட்ட நாற்றுக்களை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஏனெனில் நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். விவசாயமே எங்கள் பரம்பரைத் தொழில். 2011ம் ஆண்டில், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் எனக்கு 'சிறந்த விவசாயி' விருதை வழங்கியது. டிஎன்ஏயுவின் அக்ரி பிசினஸ் இன்குபேட்டரில் எங்கள் நர்சரி நிறுவனம் உறுப்பினராகவும் பதிவுபெற்றது.

-எஸ்.ராஜரத்தினம், பி.எப்.டெக் (அக்ரி),

மேட்டுப்பாளையம்-641 301.






      Dinamalar
      Follow us