/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஆண்டு முழுதும் மகசூல் தரும் பாலி ரக வாட்டர் ஆப்பிள்
/
ஆண்டு முழுதும் மகசூல் தரும் பாலி ரக வாட்டர் ஆப்பிள்
ஆண்டு முழுதும் மகசூல் தரும் பாலி ரக வாட்டர் ஆப்பிள்
ஆண்டு முழுதும் மகசூல் தரும் பாலி ரக வாட்டர் ஆப்பிள்
PUBLISHED ON : டிச 25, 2024

பாலி ரக வாட்டர் ஆப்பிள் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்திசெய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய் மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், பாலி ரக வாட்டர் ஆப்பிள்மரத்தை சாகுபடி செய்துள்ளேன். இது மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடிசெய்யலாம். நம்ம ஊரில் மணல் கலந்தகளிமண், சவுடுமண் உள்ளிட்ட பலவிதமண்ணுக்கு ஊட்டமாக வளர்கிறது.
குறிப்பாக, பாலி ரக வாட்டர் ஆப்பிள்சீசனுக்கு மட்டுமே விளைச்சல் கொடுக்காது.ஆண்டு முழுதும் மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
இந்த வாட்டர் ஆப்பிள், பிற ரக வாட்டர் ஆப்பிளை போல இல்லாமல் குட்டையாக காணப்படும். இவை, வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு உள்ளிட்ட நான்கு விதமான நிறங்களில் உள்ளன.
ஒவ்வொரு வாட்டர் ஆப்பிளும் தனித்தனி சுவையுடன் இருக்கிறது. புறநகரில் வசிக்கும் விவசாயிகள், பாலி ரக வாட்டர் ஆப்பிள்சாகுபடி செய்தால் சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். இந்த பழங்கள் சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
72005 14168