PUBLISHED ON : டிச 25, 2024

நீளமான இளஞ்சிவப்பு நிற அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரமின்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் பூமியில், பலவிதஅவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இதில், நீள இளஞ்சிவப்பு நிற அவரைக்காய் நன்றாக வருகிறது.
குறிப்பாக, மற்ற ரக அவரைக்காயில், ஒரு காம்பில் நான்கு அவரைக்காய்கள் வரையில்காய்க்கும்.
இந்த இளஞ்சிவப்பு நிற அவரைக்காயில் ஒரு காம்பிற்கு இரு அவரைக்காய் மட்டுமே காய்க்கும்.
அதிக சத்து நிறைந்து இருப்பதால், பிற அவரைக்காயை காட்டிலும் மகத்துவம் வாய்ந்தது.
நீள இளஞ்சிவப்பு நிற அவரைகாய் நிறத்தில் வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் விலை கூடுதலாக விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.குகன்,
94444 74428