/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பயிற்சி... முயற்சி... வளர்ச்சி...
/
பயிற்சி... முயற்சி... வளர்ச்சி...
PUBLISHED ON : ஜூன் 06, 2018

துாத்துக்குடி முத்தையாபுரம் வேளாண் பண்ணையில் விவசாய தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியாக அனுபவம் உள்ள பேராசிரியர்களால் பசுமைக்குடில், கால்நடை பராமரிப்பு, வருமானம் தரும் காய்கறிகள், உழவர் கூட்டமைப்பு, சொட்டுநீர், உரமிடுதல், துல்லிய பண்ணையம், மண் வளம், நபார்டு வங்கி திட்டங்கள், காய்கறி பயிரிடுதல், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கு பெறலாம்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு இலவசம். ஏற்கனவே பயிற்சி பெறாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அலைபேசி 83000 26073ல் தொடர்பு கொண்டு பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. பயிற்சிக்கு பின் சான்றிதழ், விவசாய பணி துவங்க, வேளாண் கடன் வசதி உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.
-எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்,
சென்னை

