/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மல்லிகையை தாக்கும் சிவப்பு சிலந்தி
/
மல்லிகையை தாக்கும் சிவப்பு சிலந்தி
PUBLISHED ON : மே 23, 2018

நோயின் அறிகுறிகள்: சிலந்திகள் இலையின் அடிப்பரப்பில் இருந்து நுாலாம் படையினை உருவாக்கி அதனுள் இருந்து சாப்பிடும்.
இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்புள்ளிகள் இருக்கும். பின் சிவப்பாக மாறி விடும். தாக்கப்பட்ட இலைகள் வாடிவிடும். பூக்கள் உருவாவது குறைந்து விடும்.
கட்டுப்படுத்தும் நுட்பம்: தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் 1.5 மி.லி., டைக்கோபால் அல்லது 2 கிராம் நனையும் கந்தகத்துாள் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிக பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்தலாம்.
முனைவர் ரா.விமலா, தலைவர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

