sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முற்றிய தேங்காய் தண்ணீரை நுண்ணுயிர் கொண்டு மதிப்பு கூட்டலாம்

/

முற்றிய தேங்காய் தண்ணீரை நுண்ணுயிர் கொண்டு மதிப்பு கூட்டலாம்

முற்றிய தேங்காய் தண்ணீரை நுண்ணுயிர் கொண்டு மதிப்பு கூட்டலாம்

முற்றிய தேங்காய் தண்ணீரை நுண்ணுயிர் கொண்டு மதிப்பு கூட்டலாம்


PUBLISHED ON : செப் 26, 2012

Google News

PUBLISHED ON : செப் 26, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்னையின் இளநீரும் கொப்பரையும் மனிதனுக்குபல்வேறு நன்மைகளை தரவல்லன. இளநீரில் நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ச்சி ஊக்கிகளும் அதிக அளவில் உள்ளதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இப்போது பாக்கெட் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தாது உப்புக்கள் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் இருந்தாலும் அவ்வளவாக பயன்படுத்தப் படுவதில்லை. குறிப்பாக, இது திசுவளர்ப்பில் ஊடகம் தயார் செய்வதில் ஒரு முக்கிய இடுபொருளாக உள்ளது.

சராசரியாக ஒரு தேங்காயில் சுமார் 120-150 மில்லி தண்ணீர் இருக்கும். ஒரு நடுத்தர தேங்காய் பதனிடும் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 10,000 தேங்காய் உபயோகப்படுத்தப்பட்டால், அவற்றிலிருந்து முறையே 2000 லிட்டர் தண்ணீர் வெளியில் வீணடிக்கப் படுகின்றது. இவை நீர்நிலைகளில் சென்றடையும்போது உயிரி சார்ந்த பிராணவாயு தேவையை 3,60,000 மிகி அளவு அதிகரித்து, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிக்கின்றது. நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் நிரம்பிய தேங்காய் தண்ணீர் வெளியில் கொட்டப்படாமல் இருக்க வேண்டுமானால் அதை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். 100மி. தேங்காய் தண்ணீரில் 4-5 டிகிரி பிரிக்ஸ் மொத்த சர்க்கரை அளவு உள்ளது. மேலும் பல உயிர்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இதில் உள்ளதால் நுண்ணுயிர் வளர்ப்பதற்கு தண்ணீரை உபயோகித்து, அதில் நுண்ணுயிர் நொதித்தல் மூலமாக நார்ச்சத்து மிகுந்த ஒரு வகையான ஜெல்லி உணவை தயாரிக்க முடியும். இவ்வாறாக செய்யப்படும் உணவு வகையை நுண்ணுயிர் நார்மப்பொருள் (மைக்ரோபியல் செல்லுலோஸ்) என்றும் நாட்டா-டி-கோக்கோ எனவும் அழைப்பர். இவ்வகை நார்மப்பொருள் உணவு அதிக நார்ச்சத்து உள்ளதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நார்மப்பொருள் சுரக்கும் பாக்டீரியா - அசிட்டோபேக்டர் சைலினம்:

மைக்ரோ பியல் நார்மப்பொருளின் முக்கியத் துவத்தை கருத்தில் கொண்டு நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவையில் தேங்காய் தண்ணீரை மதிப்புக்கூட்டி நார்மப் பொருள் உற்பத்தி செய்யும் அசிட்டோபேக்டர் சைலினம் என்னும் நுண்ணுயிர் பிரித்தெடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாக்டீரியல் நார்மப் பொருள் தயாரிக்கும் முறை:

1.0 லி தேங்காய் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 15 விழுக்காடு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கியபின் 5 விழுக்காடு அம்மோனியம்சல்பேட் உப்பை கலக்கவும். பின் கார அமிலத் தன்மை 5.0 ஆக அசிட்டிக் அமிலம் கொண்டு சரிசெய்ய வேண்டும். இவ்வாறாக தயாரித்த கரைசலை அகண்ட வாய்கொண்ட புட்டியில் நிரப்பி, பஞ்சு கொண்டு?அடைத்து அதனை தொற்றுநீக்கம் (பாஸ்சரைஸ்) செய்ய வேண்டும். நன்கு ஆறியவுடன் அதனோடு 10 விழுக்காடு அ.சைலினம் பாக்டீரியாவை கலந்து அறை வெப்பத்தில் 14 நாட்களுக்கு அப்படியே ஆட்டாமல் அசைக்காமல் நிலையாக ஒரு இடத்தில் வைத்தல் அவசியமாகும். 14 நாட்களுக்கு பிறகு சுமாராக 1-2 செ.மீ. அளவுக்கு கெட்டியான பால் ஆடை போன்று நார்மப்பொருள் உற்பத்தியாகி மிதக்கும். இதுவே உணவு நார்ச்சத்து மிகுந்த பாக்டீரியல் செல்லுலோஸ்.

பாக்டீரியல் நார்மப்பொருளை பதனிடும் முறை:

உற்பத்தி செய்த பாக்டீரியல் நார்மப்பொருள், அமிலத் தன்மை கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட?முடியாது. அதை உட்கொள்வதற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். எனவே கரைசலில் மிதந்துகொண்டு வளரும் நார்மப்பொருளை எடுத்து பலமுறை நன்கு நீரில் அலச வேண்டும். பின் சிறிய துண்டங்களாக வெட்டி மீண்டும் குழாய் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின் அதை கொதிக்கும் தண்ணீரில் 15 நிமிடம் வேகவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அதில் உள்ள அமிலத் தன்மை நீக்கப்பெற்று பாக்டீரியாவின் வாடையும் விலகுகின்றது. பின் தண்ணீரை நன்கு வடித்து எடுத்துவிட்டு சர்க்கரைப்பாகில் 5 நிமிடம் போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் சுவைக்காகவும் வாசனைக்காகவும் பைன் ஆப்பிள் எசென்ஸ் கலந்துகொள்ளலாம். பின் அதனை ஒரு சுத்தமான புட்டியில் அடைத்துவைத்து உபயோகித்துக் கொள்ளலாம். இது ஆறு மாத காலம் வரை கெடாமல் இருக்கும். 1.0 லி. தேங்காய் தண்ணீரில் இருந்து சுமார் 400கி நார்மப்பொருள் உற்பத்தி செய்யலாம். இவை யாவும் இந்திய சந்தையில் ஒரு கிலோ ரூ.70/- என விற்கப்படுகின்றது.

இதை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் மிகக்குறைவே. சுமார் 1 கி.கி. தயார் செய்வதற்கு ஆகும் இடுபொருள் செலவு ரூ.30/- மட்டுமே. இதற்கான தொழில் தொடங்கும் வழிமுறைகளை தென்னை மேம்பாட்டு வாரியம், கொச்சி, கேரளா-682 011 வழங்குகிறது.

முனைவர் க.கோபாலசுவாமி,

பேராசிரியர்,

கு.காயத்ரி, ஆராய்ச்சி மாணவி,

வேளாண் நுண்ணுயிரியல் துறை,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641 003.






      Dinamalar
      Follow us