sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கம்பு நூடுல்ஸ் - நவீன தொழில்நுட்பம்

/

கம்பு நூடுல்ஸ் - நவீன தொழில்நுட்பம்

கம்பு நூடுல்ஸ் - நவீன தொழில்நுட்பம்

கம்பு நூடுல்ஸ் - நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜூன் 29, 2011

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட்கொள்ளும் தானிய வகைகளில் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள் சிறுதானியங்களை அன்றாட உணவாக எடுத்துக்கொள்கின்றனர்.

கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா-68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளிசரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் தேவையான அளவு தண்ணீர்.

செய்முறை: உலர் உபயோகப்பொருட்கள் அனைத்தையும் நன்றாக சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் (65 டிகிரி செ) கலந்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஆவியில் வேகவைக்க வேண்டும். பின் மாவுக்கலவையை அச்சிலிட்டு பிழிந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து வெயில் அல்லது மின் உலர்த்தி மூலம் 60 டிகிரி செ. வெப்பநிலையில் 3 முதல் 4 மணி நேரம் உலரவைக்கவும். உலரவைத்த நூடுல்ஸ், காற்றுப்புகாதவாறு சிப்பான்களில் அடைத்து வைக்க வேண்டும்.

நூடுல்ஸ் உணவு தயாரித்தல்: தேவையான பொருட்கள்: நூடுல்ஸ்-25 கி, பீன்ஸ்-25 கி, முட்டைக்கோஸ்-10 கி, பெரிய வெங்காயம்-10கி, குடைமிளகாய்-10கி, வெங்காயத்தாள்-5கி, கொத்தமல்லி இலை-5கி, சோயாக சாஸ்-3 கி, தக்காளி சாஸ்-3 மிலி, மிளகு-5 கி, உப்பு-5கி, எண்ணெய்-10மிலி.

செய்முறை: நூடுல்சை கொதிநீரில் 20 நிமிடம் வேகவைக்கவும். தண்ணீரை வடித்து ஆறவைத்து அத்துடன் சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுந்து, வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு, மிளகு சேர்த்து வதக்கி, நூடுல்சுடன் கலந்து 3 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

(தொகுப்பு: து.மாலதி, ந.வரதராஜு, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 94433 49748.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us