sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி

/

உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி

உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி

உப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி


PUBLISHED ON : மார் 07, 2018

Google News

PUBLISHED ON : மார் 07, 2018


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் விவசாயி உமாசங்கர். இவர் தனது 15 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையில் தொட்டி அமைத்துள்ளார்.

தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 500 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து 25 அடி நீளம், 25 அடி அகலம், 6 அடி உயரம் உள்ள தொட்டியில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை சேமிக்கிறார். அதில் உப்புப்படிவம் தொட்டியின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது.

இதன் மூலம் உப்பு தண்ணீர் அல்லாத தெளிந்த நீரை தனது சொட்டு நீர் பாசன அமைப்பு மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு பி.வி.சி., குழாய் மூலம் பாசனம் செய்கிறார். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நாட்டு பசுகோமியத்தை சேமித்து, சொட்டுநீர் பாசன வெஞ்சூரி அமைப்பின் மூலம் மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நீர் பாய்ச்சி வருகிறார். மற்றொரு முறையில் மாட்டு கோமியத்தை பி.வி.சி., குழாய் மூலமாக தொட்டியில் கலக்குகிறார். இதன் மூலமும் அவர் சொட்டுநீர் பாசனம் அமைத்து நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறார்.

இவர் பஞ்சகவ்யம், மூலிகை பூச்சிவிரட்டி, அமினோ அமிலம், ஈ.எம். கரைசல் மூலமாகவும் பயிர்களை பராமரித்து லாபம் ஈட்டி வருகிறார். எந்த ரசாயன உரத்தையும் வாங்காமல், தோட்டத்தில் வீணாகும் பொருட்களை மக்க செய்து, மண்புழு உரம் தயாரிக்கிறார். இவரது முறையை அனைத்து விவசாயிகளும் கடைப்பிடித்து நீர் சிக்கனத்தை கையாளலாம். உப்புப்படிவம் அடைபடுதலை திருத்தி கொள்ளலாம்.

தொடர்புக்கு 94865 85997.

- டி.யுவராஜ், வேளாண் பொறியாளர், உடுமலை.






      Dinamalar
      Follow us