PUBLISHED ON : பிப் 05, 2025

கோவை ஈஷா யோக மையத்தின் காவிரி கூக்குரல் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.3க்கான மானிய விலையில் டிம்பர் பயன்பாட்டுக்கான மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
தேக்கு, வேங்கை, செம்மரம், மஞ்சள் கடம்பு, வெண் கடம்பு, செம்மரம், ஈட்டி, சந்தனம், மகோகனி, காயா மகோகனி, வெள்ளை மகோகனி, குமிழ், நாவல், நீர் மருது, கருமருது, மலைவேம்பு, இலுப்பை, படாக்கு, பலா, பிள்ளை மருது, புன்னை, தான்றிக்காய், கொடுக்காபுளி, செங்கருங்காலி, பென்சில் (கத்திக்கருவை) மரக்கன்றுகள் தலா ரூ.3க்கு வழங்கப்படுகிறது.
பூ மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகளான செண்பகம், மகிழகம், அசோகா, மந்தாரை, சரக்கொன்றை, இலைப்புரசு, சொர்க்கம், நாகலிங்கம், பாதாம், இயல்வாகை, தண்ணீர் காய், பூவரசு போன்றவையும் பழ மரங்களான கடுக்காய், புளி, சிறு நெல்லி, பெருநெல்லி, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, விளாம் பழம், வில்வ மரக்கன்றுகள் தலா ரூ.7க்கு விற்கப்படுகின்றன. அனைத்துமே நாட்டுமரக்கன்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 80009 80009.