sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

குறுகியகால நெல் சாகுபடி நுட்பங்கள்

/

குறுகியகால நெல் சாகுபடி நுட்பங்கள்

குறுகியகால நெல் சாகுபடி நுட்பங்கள்

குறுகியகால நெல் சாகுபடி நுட்பங்கள்


PUBLISHED ON : ஜூலை 06, 2011

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவீன தொழில்நுட்பம்

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப்படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரகங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 47, கோ.47 மற்றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகியவை ஏற்றவை.

ஒற்றை நாற்றாக ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 7 முதல் 8 கிலோ விதையளவு போதுமானது. ஒற்றை நாற்றுகள் சரிவராத தருணத்தில் இரண்டு நாற்றுக்களாக நடவுசெய்ய 12 முதல் 15 கிலோ வரை தேவைப்படுகிறது.

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் விதைக்கலாம். இவ்வாறு ஊறவைத்த விதையை நனைந்த கோணிச்சாக்கில் கட்டி மூடி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டி பின்னர் விதைக்க வேண்டும். 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள் நடவு செய்ய ஏற்றவை.

நடவு வயல் நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு மிகவும் சீரான முறையில் சமன் செய்யப்பட வேண்டும். வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளியும் பயிருக்கு பயிர் 25 செ.மீ. என்ற அளவில் நாற்றுக்கள் நடவு செய்யப்பட வேண்டும். இளம் நாற்றுக்களின் பயிர் பிடிப்புத்திறன், தூர்கட்டி வளரும் திறன் அதிகமாக உள்ளதால் அதிக தூர்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும். நாற்றுக்கள் பாத்திகளிலிருந்து பிரிந்த 30 நிமிடங்களுக்குள் நடவு செய்ய வேண்டும்.

நெற்பயிருக்கு சாதாரணமாக காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். அதாவது மண் மறைய நீர்கட்டுதல் நடவு செய்த முதல் 10 நாட்களில் மிக முக்கியம். பின்னர் சுமார் 1 முதல் 2 செ.மீ. அளவிற்கு நீர்ப்பாசனம் செய்து வயலில் மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்தமுறை நீர் பாய்ச்சுதல் வேண்டும். இம்முறை பூங்கதிர் உருவாகும் தருணத்திலிருந்து அறுவடை நிலை வரை 4 முதல் 5 செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிட வேண்டும்.

சதுர நடவு முறையில் நடவு செய்யப்படுவதால் கோனோவீடர் என்ற உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி களை கட்டுப்பாடு செய்யலாம். இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே செய்யப்பட வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறைகள் உருளைக் களைக் கருவியைப் பயன்படுத்தி களைகளை வயலிலேயே மடக்கிவிடுவதால் பயிருக்கு உரமாவதோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது. பயிர்களுக்கு இடையே வேருக்கு அருகில் உள்ள களைகளைக் களைய, கைக்களை எடுப்பது அவசியம்.

பயிரின் ஆரம்பகாலத்தில் களைகளைக் கட்டுப் படுத்த பூட்டாக்குளோர் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

பயிர் நன்கு வளர இயற்கை மற்றும் செயற்கை உரங்களை இடவேண்டும். கோடையில் சணப்பை, தக்கைப்பூண்டு பயிரிட்டு மடக்கி உழுதுவிடலாம். இதனுடன் எக்டருக்கு 120:38:38 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றது. தழை, சாம்பல் சத்துக்களை பிரித்து இடுவதால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கிறது.

எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை ஒரு கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து உழுது சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேற்பரப்பில் தூவிவிட வேண்டும். பொதுவாக மணிச்சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்விளைச்சல் பெறலாம். (தகவல்: செ.ராதாமணி, ச.ராபின், பு.முத்துகிருஷ்ணன், நெல்துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 033. 94430 07371).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us