/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கன்னி ரக ஆடு வளர்ப்பில் கணிசமான வருவாய்
/
கன்னி ரக ஆடு வளர்ப்பில் கணிசமான வருவாய்
PUBLISHED ON : ஜூலை 23, 2025

கன்னி ரக ஆடு வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, அலர்மேல்மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி விவசாயி எல்.பாஸ்கர் கூறியதாவது: 
மேய்ச்சல் முறையில் கன்னி ரக ஆடு வளர்த்து வருகிறேன். ஆடு வளர்ப்பு பொறுத்தவரையில், பரண் மீது ஆடு வளர்ப்பு; கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு உள்ளிட்ட முறைகள் உள்ளன. 
இது போன்ற ஆடுகளுக்கு, பண்ணையில் தயாரிக்கும் ஊட்டம் ஏற்றப்பட்ட தீவனங்களை வழங்கினால் மட்டுமே ஆடுகளின் எடை மற்றும் வளர்ச்சி சரியாக இருக்கும். 
இதில், மேய்ச்சல் முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு, தீவனங்கள் வழங்க வேண்டியதில்லை. இதனால், தீவன செலவு மிச்சம். மேலும், சந்தைக்கு உயிருடன் ஆடு விற்பனைக்கு எடுத்து செல்லும் போது, ஆட்டின் வளர்ச்சி குறையாமல் இருக்கும். 
வளர்ப்புக்கு ஆடுகள் விற்பனை செய்தாலும், இறைச்சிக்கு விற்பனை செய்தாலும் இரு விதங்களிலும் கணிசமான வருவாய் கிடைக்கும். 
இவ்வாறு அவர் கூறினார். 
- -எல்.பாஸ்கர், 
72002 25154. 

