sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : நவ 28, 2012

Google News

PUBLISHED ON : நவ 28, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிராகன் கிங் தர்பூசணி:



ஏக்கருக்கு ஒரு லட்சம் நிகர வருமானம் தருகிறது என்று கூறும் அனுபவ விவசாயி ரா.நாகராஜன், த/பெ. ராமகிருஷ்ணன், வேடப்பாக்கம் போஸ்ட், திண்டிவனம் தாலுகா-604 301, போன்: 85057 26147.

சாகுபடி குறிப்புகள்: நடவு - ஜனவரி முதல் வாரம், அறுவடை மார்ச் கடைசி வாரம் (65-70 நாட்கள்); தனது 25, 26வது வயதிலிருந்து தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். முதல் வெட்டில் ரூ.6200/டன் மேனிக்கு விலை கிடைத்திருக்கிறது. இரண்டாவது வெட்டு தர்பூசணிக்கு ரூ.4750/டன் மேனிக்கு விலை கிடைத்திருக்கிறது.

சிறப்பம்சங்கள்: நல்ல ருசி, பீஸ் போட நல்லா இருக்கு, தூக்கிப்போட்டா ஒன்றும் ஆகிறதில்லை. டேமேஜ் ஆகாம ரொம்ப தூரம் பாதுகாப்பா கொண்டு செல்லலாம். 12 கிலோதான் உச்சபட்ச எடை. ஒரு காய்க்கு வைரஸ் தாக்குதல் குறைவு. 27 கிலோ உச்ச பட்ச எடை, சாகுபடி செலவு ரூ.21,725/ஏக்கர். மொத்த வருமானம் ரூ.1,23,675.

மேலும் விபரங்களுக்கு: பகுதி விற்பனை அலுவலர், (சின்ஜென்டா), ஜெயக்குமார், போன்: 94422 14885; பகுதி களப்பணியாளர் முனியப்பபிள்ளை,

போன்: 99420 61360.

வெட்டிவேரின் மருத்துவப்பயன்கள்:



சி.எம்.சூழல் மூலிகைப்பண்ணையின் ஆய்வறிக்கையின்படி வெட்டிவேரில் புற்றுநோய் கட்டிகள், வீக்கங்கள், ஆஸ்துமா, சிலந்திக் கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்துப்பொருள் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், மூட்டு வீக்கம், கல்லீரல் பராமரிப்பு, ரத்தக்குழாய் பராமரிப்பு, நரம்புகள் வலுவாக்கல், தோல் பராமரிப்பு, தூக்கம் தருதல், அல்சர் புண் குணமாகுதல் போன்ற பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவியாக வெட்டிவேர் இருப்பதோடு வெட்டிவேரை உள்ளும் புறமும் பயன்படுத்தும் எளிய பொருட்களாக மாற்றி அதிகப்படுத்தி வருகிறது சி.எம்.சூழல் மூலிகைப்பண்ணை.

வெட்டிவேரில் கூந்தல் தைலம், இளமை தைலம், முக அழகு பவுடர், வெட்டிவேர் காபி, டீ, வெட்டிவேர் தேன், வெட்டிவேர் நறுமண நீர், வெட்டிவேர் சுத்தமான பவுடர், அபிஷேகப் பன்னீர், வெட்டிவேர் மவுத்வாஷ் போன்ற தயாரிப்புகள் பற்றிய மேலும் விபரங்களுக்கு 'சி.பாண்டியன், சி.எம்.சூழல் மூலிகைப்பண்ணை, (வெட்டிவேர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி), குருவாடிப்பட்டி, சுண்டக்காடு அஞ்சல், திருப்புத்தூர், சிவகங்கை. போன்: 96779 85574.

எருமைமாடு வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்:

கன்றுகளுக்கு போதுமான பால், எருமை மாடுகளுக்கு போதிய தரமான கலப்பு மற்றும் பசுந்தீவனம் அளித்தல், சினைப்பருவத்தை சரியாக கண்டறிந்து சரியான தருணத்தில் கருவூட்டல் மேற்கொள்வது, இனப்பெருக்க நோய்களுக்கு சரியாயக மருத்துவம் மேற்கொள்வது, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல், ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று பெற்றுத்தருதல்.

எருமைமாடு பராமரிப்பில் லாபம்பெற சரியான முறையில் இனப்பெருக்க மேலாண்மையை மேற்கொள்வது மாடு வளர்ப்போரின் தலையாய கடமையாகும். எருமைமாடு ஆண்டுக்கு ஒரு கன்று பெற தவறினால் பண்ணை நட்டத்திற்கு செல்லும். 2010ம் ஆண்டு புள்ளி விபரப்படி இந்தியாவில் 979 லட்சம் எருமை மாடுகள் உள்ளன. எருமை மாடுகளில் சரியான தீவன பராமரிப்பின்மை, மேய்ச்சலுக்கு உட்படுத்தப்பட்டு வளர்ப்பதால் கோடை காலங்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கப் பிரச்னைகள் ஏற்படுகிறது.

சாதாரணமாக எருமைகளுக்கு கன்று ஈன்றவுடன் அதிகமானபுரதம் உள்ள தரமான கலப்புத் தீவனத்தை அளிக்க வேண்டும். 8 முதல் 9 மாத சினைத் தருவாயில் மேற்கண்ட தீவனத்தைக் கொடுப்பது மாடு வளர்ப்போர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனைய நேரங்களில் அவற்றிற்கு தேவையான சத்துப் பொருட்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் ஏ சத்து கொண்ட தீவன பயிர்களான கோ.4 தீவனச்சோளம், வேலிமசால், சூபா புல், கிளரிசிடியா, அகத்தி, பசுந்தளிர்கள் சுமார் 20-25 கிலோ வரை ஒரு எருமைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு தீவனமாக அளிக்க வேண்டும்.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us