sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கால்நடை சார்ந்த பயிற்சிகள்

/

கால்நடை சார்ந்த பயிற்சிகள்

கால்நடை சார்ந்த பயிற்சிகள்

கால்நடை சார்ந்த பயிற்சிகள்


PUBLISHED ON : நவ 28, 2012

Google News

PUBLISHED ON : நவ 28, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழில்மயமாக மாறிவருகின்ற பால் பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவுப் பொருட்கள் பதனிடுதல் போன்ற பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மனிதவளத் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கல்லூரிகள்/மையங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

செயல்திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள்:



1. பால்பண்ணை உதவியாளர், 2. பால் பதன நிலைய உதவியாளர், 3. பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர், 4. தீவன ஆலை மேற்பார்வையாளர், 5. தீவன பகுப்பாய்வுத் தொழில்நுட்ப உதவியாளர், 6. கால்நடைப் பண்ணை மேலாளர், 7. கோழிப்பண்ணை மேலாளர், 8. குஞ்சு பொரிப்பக மேற்பார்வையாளர், 9. கோழிப் பண்ணை மேற்பார்வையாளர், 10. கோழியின இனப்பெருக்கப் பண்ணை மேற்பார்வையாளர், 11. வான்கோழிப் பண்ணை உதவியாளர், 12. கோழிகளுக்கான நோய்த்தடுப்பூசியாளர், 13. ஆய்வக உதவியாளர், 14. அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க அறை உதவியாளர், 15. செல்ல பிராணிகளுக்கான உடனாள், 16. மீன் உணவு தயாரிக்கும் உதவியாளர், 17. இறால் பண்ணை உதவியாளர், 18. மீன் பதன உதவியாளர்.

பயிற்சி காலம்: வரிசை எண். 1, 3, 4, 8, 11, 12, 16, 17, 18 ஆகிய பயிற்சிகளுக்கு 1 மாதம். 2, 9 ஆகியவற்றிற்கு 45 நாட்கள். 10, 15க்கு 2 மாதம், வரிசை எண்: 5, 6, 7, 13க்கு 3 மாதம், 14க்கு 6 மாதம்.

சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்:



1. கறவை மாட்டுப்பண்ணையம், 2.செம்மறியாடு வளர்ப்பு, 3. வெள்ளாடு வளர்ப்பு, 4. பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி, 5. உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல், 6. கால்நடைப் பண்ணைக் கழிவினைப் பயன்படுத்துதல், 7. முயல் வளர்ப்பு, 8. வெண்பன்றி வளர்ப்பு, 9. ஜப்பானியக் காடை வளர்ப்பு, 10. நாட்டுக்கோழி வளர்ப்பு, 11. ஈமு கோழி வளர்ப்பு, 12. நன்னீர் மீன் வளர்ப்பு, 13. கடல்பாசி உற்பத்தி, 14. அலங்கார மீன் வளர்த்தல் மற்றும் இனப்பெருக்கம்.

பயிற்சி காலம்: ஒரு மாதம். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்/ மையங்களில் பயிற்சியை மேற்கொள்ளலாம். செயல்திறன் மேம்பாட்டு மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளில் ஆண்டு முழுவதும் சேர்ந்து பயன்பெறலாம்.

விண்ணப்பப்படிவம் மற்றும் விவரக் குறிப்பேட்டினைப் பெற விரும்புவோர், 'தொலைநிலைக் கல்வி இயக்குனர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை-600 051. போன்: 044-2555 1411, வலை: www.tanuvas.ac.in. என்ற முகவரிக்குப் பயில விரும்பும் பயிற்சியைக் குறிப்பிட்டு, வேண்டுகோள் கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் ரூ.20/-க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட (30 x 25 செ.மீ.) உறையை இணைத்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம் அல்லது விண்ணப்பப் படிவம் மற்றும் விவரக் குறிப்பேட்டினைப் பல்கலைக்கழக இணையதளம் www.tanuvas.ac.in. மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சிகள் களப் பயிற்சி அடிப்படையில் வழங்கப்படும்.

எம்.ஞானசேகர், தொழில் மற்றும் விவசாய ஆலோசகர், 97503 33829.






      Dinamalar
      Follow us