sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு

/

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு


PUBLISHED ON : நவ 28, 2012

Google News

PUBLISHED ON : நவ 28, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதிவேடுகள் என்றால் நாம் நம் பண்ணையில் செய்யக்கூடியவைகளையும் பண்ணைகளில் கவனிக்க வேண்டியவைகளையும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் குறித்து வைத்துக் கொள்வதுதான். பதிவேடுகள்தான் பண்ணையின் திறனாய்வுக்கு உதவியாய் உள்ளவை. பதிவேடுகள் ஒரு பண்ணையில் வரவு செலவுகள், அங்குள்ள ஆடுகளின் திறன் மற்றும் ஆடுகளின் முக்கிய பொருளாதார குணங்களை அறிய உதவுகின்றன. பதிவேடுகள் உபயோகத்திற்குத் தகுந்த முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பதிவேடுகள் பராமரிக்கப்படாத ஆட்டு மந்தைகளின் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படும். உதாரணமாக ஓர் ஆட்டுப்பண்ணையில் ஒவ்வொரு ஆட்டின் பாராம்பரியம், அதன் திறன், வளர்ச்சி போன்ற மற்ற விவரங்கள் பதிவேடுகள் மூலம்தான் அறியப் படுகிறது. எனவே குறைந்தபட்சம் சில முக்கிய தகவல்கள் கிடைப்பதற்காக வேண்டியாவது சில பதிவேடுகள் அவசியம் வைக்க வேண்டும். தற்போது நாம் ஒரு வெள்ளாட்டுப் பண்ணையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவேடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. பிறப்பு பதிவேடு:



இதில் தொடர் எண், இனம், தனிப்பட்ட ஆட்டின் எண், ஆணா/பெண்ணா, நிறம், பிறந்ததேதி, தாய் தகப்பன், பிறப்பு எடை போன்றவைகள் குறிக்கப்பட வேண்டும்.

2. இளம் ஆடுகள் பதிவேடு:



இது ஆட்டுக்குட்டிகள், பால் மறந்தபின்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் எண், ஆண்/பெண், என்று பால் மறந்தது, இதற்கு போட்டுள்ள தடுப்பூசிகள் போன்றவை குறிக்கப்படும்.

3. இனவிருத்திகள் பதிவேடு:



இதில் இனவிருத்திக்கு அனுமதிக்கப் பட்ட பெட்டை ஆடுகளின் எண்ணிக்கை, அதில் எத்தனை பெட்டை ஆடுகள் கிடாவினால் சினைக்குச் சேர்க்கப்பட்டன, அப்படி சேர்க்கப்பட்ட பெட்டை ஆடுகளில் எத்தனை குட்டிகள் ஈன்றன என்ற கணக்கு, ஈன்ற குட்டிகளில் பால் மறக்கடிக்கப்பட்ட வகையில் அதாவது 3 மாதம் வரை வளர்ந்தது, இரட்டை குட்டிகள் போட்டால் அதன் விவரம், குட்டிகளின் பிறப்பு எடை மற்றும் பால் மறக்கடிக்கப்படும் வரை உள்ள எடை போன்றவை குறிக்கப்பட வேண்டும்.

4. இறப்பு பதிவேடு:



இறந்த ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பிற்கான காரணம் போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்.

5. கழிக்கப்பட்ட ஆடுகள் பதிவேடு:



குறைபாடுள்ள ஆடுகள் மற்றும் இனவிருத்திக்குப் பயன்படாத ஆடுகளின் விற்பனை விபரம் பற்றிய பதிவேடு, தீவனப் பதிவேடு, மருந்துகள் பதிவேடு, தடுப்பூசி பதிவேடு மற்றும் பொருளாதார அல்லது வரவு செலவு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். தகவல்: கே.வெங்கடேஷ், போன்: 98430 71006.

-கே.சத்தியபிரபா, உடுமலை.






      Dinamalar
      Follow us