
நெல்விதைகள் விற்பனைக்கு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு ஆதார மற்றும் உண்மைநிலை விதைகள், விதை உற்பத்தியாளர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
(தகவல்: விதை மையம், த.வே.பல்லைக்கழகம், மேட்டுப்பாளையம் - 641 301, கோயமுத்தூர். போன்:0422 - 661 1232, 661 1432)
மரங்களுக்கு விலை நிர்ணயம்: இல்லாதது குறித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் தெரிவிப்பது - 'மலைவேம்பு, சவுக்கு, பெருமரம், சூபாபுல், தைலம், குமிழ், சிசு ஆகிய ஏழு வகையான மரங்களே தமிழகத்தில் 70 சதவீதம் நிலங்களில் பயிரிடப்படுகின்றன. காகித ஆலைகள், பிளைவுட், நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஏழுவகை மரங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயித்து உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வன இயல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

