வீரிய ஒட்டு சிகப்புத் தீவனச் சோளம்: ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ் வழங்கும் 'காமதேனு' 45 நாட்களுக்கு மேல் அறுத்து கால்நடைகளுக்கு வழங்கலாம். இந்த ஹைபிரீடு அதிவேகமாக வளரக்கூடியது. கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும் பசுந்தீவனமாகவும் பதப்படுத்தப்பட்ட 'சைலேஜ்' ஆகவும் பயன்படுத்தலாம்.
ஜூன் - ஜூலை பருவம் ஏற்றது. பிப்ரவரி - மார்ச், அக்டோபர் - நவம்பர் ஆகிய பருவங்களிலும் பயிரிடலாம். பொதுவாக நீர்வரத்தைப் பொறுத்து ஆண்டு தோறும் பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு 12-15 கிலோ விதை தேவைப்படும். 2-2.5 செ.மீ ஆழத்தில் மேலாக நட வேண்டும். 3/4 அடிக்கு ஒருவிதை அளவில் கணக்குப்பண்ணி விதைக்க வேண்டும். முதல் உயிர் தண்ணீர் போக 10-15 நாட்களுக்கு 1 முறை பாசனம் தேவைப்படும்.
குப்பை உரம் 3-4 மெ.டன் போடவும். அடியுரமாக யூரியா 1 மூடை, சூப்பர்பாஸ்பேட் 2 மூடை, பொட்டாஷ் 1/2 மூடை லேசா தேவைப்படும் போது கொஞ்சம் யூரியா போடலாம். அல்லது 2 சதம் யூரியா கரைசலை ஸ்பிரே செய்யலாம். கந்தகத்தை நேரடியாகவோ, ஜிங்க் சல்பேட் மூலமாகவோ வழங்குவது அவசியம்.
இந்த ஹைபிரீடு சோளத்தை 3,4 வெட்டுவரை பராமரிக்கலாம். முதல் வெட்டு 60-75 நாட்களில் பூக்கும் போது வரும் அதற்கடுத்து 30-35 நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். முதல் 45 நாட்களுக்கு முன் அறுவடை செய்தால், தீவனத்தட்டையில் HCN (எச்சிஎன்) இருக்கும் அதைத் தின்றால் மாட்டிற்கு மயக்கம் வரும்.
விளைச்சல் 40 டன் / ஏக்கர் (பசுந்தீவனம்) தீவனப்பயிர் வளரத் தோதான களர் அமில (PH) விலை 7.5 (Neutral & Soil). வரிசை நடவு தான் நல்லது. தீவனச்சோள விதைகளை ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா சீட்ஸ், WCR ப்ளாட் நிர் 13அ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், செல்லாயி அம்மன் கோவில் அருகில், துவாக்குடி, திருச்சி - 620 015. போன்: 75988 77573.
துல்லிய பண்ணைய நாற்றங்காலில் பயிர் பாதுகாப்பு: நிழல் வலைக் கூடாரத்தை சுற்றியுள்ள பகுதி - குழித்தட்டுக்களை வைக்கும் போது தரைமட்டத்தை விட சற்று உயர்வாக அடுக்குதல் வேண்டும். ஒவ்வொரு முறையும் அடுக்கும் போது அப் பகுதியை, பூசணக்கொல்லி அல்லது சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு நனைக்க வேண்டும்.
மக்கிய தென்னை நார்க்கழிவு குழித்தட்டுகளில் நாற்றுகளை வளர்க்க பயன்படுத்துவதால் நாற்றங்காலில் நோய் பாதிப்பைத் தவிர்க்க 300 கிலோ தென்னை நார்க்கழிவுடன் 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கலந்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிரின் நாற்றுகளையும் இரகம் வாரியாகவும் வயது வாரியாகவும் குழித்தட்டுக்கான கூடாரத்தில் வைக்க வேண்டும்.
பூச்சிகள் மேலாண்மை:
இலைப்பேன்: மிகச்சிறிய பூச்சியான இவை இளந்தளிரிலுள்ள சாறை உறிஞ்சுவதால் இலைகளில் பழுப்பு நிறக்கோடுகளுடன் எரிந்தது போன்று காணப்படும்.
அசுவினி: இளம் தளிர்கள், இளம் தண்டுகள், வளரும் மொட்டுப்பகுதிகளில் காணப்படும். இவற்றைத் தவிர வெள்ளை ஈ, மாவுப்பூச்சிகளும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேப்ப எண்ணெய் 1 சதம் அல்லது புங்க எண்ணெய் 1 சதம் அல்லது 5 சதம் வேப்பங்கொட்டை கரைசலைப் பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம்.
டைமெத்தயோட் 2 மிலி (அ) ஆக்ஸிடெமட்டா மீதைல் 2 மிலி (அ) அசிட்டம்ரைடு 1 கிராம் / லிட்டர் (அ) தயோ குளோபிரிட் 1 மிலி / லிட்டர் (அ) தயோ மீத்தாக்சம் 0.5 கி / லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிப் பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
செம்பேன்: சிகப்பு நிறத்தில் புள்ளி போல் காணப்படும். பாதிக்கப்பட்ட இளம் இலைகள், இளம் தண்டுகள் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. இதற்கு காற்றோட்டம், மிதமான ஈரப்பதத்தை நிழல்வலைக் கூடாரத்தில் பேணுதல் வேண்டும்.
டைக்கோபால் 2 மிலி / லிட்டர் (அ) நனையும் கந்தகம் 3 கி / லிட்டர் (அ) பென் பிராக்சிமைட் 0.05 மிலி / லிட்டர் (அ) ஸ்பைரோமெஸிபேன் 0.07 மிலி / லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
நாற்று அழுகல் நோய்: நாற்றுகள் முளைத்தவுடன் தண்டுப்பகுதி மிருதுவாக இருக்கும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். கேப் டான் 2 கி / லிட்டர் (அ) கார்பன்டாசிம் 1.5 கி / லிட்டர் (அ) குளோரோதயனில் 2 கி / லிட்டர் இவற்றால் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
இதைத்தவிர பறவைக் கண்நோய் இலைக்கருகல்நோய்களும் தோன்றும். சூடோமோனால்ப்ளோரசன்ஸ் 4 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டாசிம் 1.5 கிராம் / லிட்டர் தெளிக்கலாம். (தகவல்: முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் க.இந்துமதி, முனைவர் நா.தமிழ்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரபட்டி, தருமபுரி மாவட்டம் -636 809. போன்: 04342 248 040).
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

