sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : செப் 03, 2014

Google News

PUBLISHED ON : செப் 03, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலி மேலாண்மை : நெல்நடவு வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மையில் 15 சத குருத்துகள் அல்லது 2 சத சிம்புகள் சேதமடைந்திருந்தால் எலி கட்டுப்பாடு முறைகளை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். மேலும் அதில் உருவாகும் முன் வயல்வரப்புகளில் காணப்படுகின்ற எலி வளைகளைத் தோண்டி எலிகளை கொல்ல வேண்டும்.

வயலில் வரப்புகளை முடிந்த அளவுக்கு குறுகியதாக அமைத்துக் கொள்ளுதல் அவசியம். எலிகள் மறைந்து தங்கி வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும். வைக்கோல் போர்களை முடிந்தவரை வயல்களுக்கு அருகில் வைக்காமலிருப்பது மிகவும் நல்லது. வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படுகின்ற வளைகளையும் முள் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

ஏ.டி.டி.37 மற்றும் டி.கே.எம்.9 இரகங்களை எலிகள் விரும்புவதில்லை. சேதம் அதிகமுள்ள இடங்களில் இந்த இரகங்களை பயன்படுத்துவதன் மூலம் எலியின் சேதத்தை தவிர்க்கலாம். கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் சூழ்நிலையில் ''தஞ்சாவூர் எலிக்கிட்டிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் வரப்பிலிருந்து 3மீ இடைவெளியில் கிட்டிக்கு கிட்டி 5 மீ இடைவெளி விட்டு வைத்தல் வேண்டும். பொரியுடன் சிறிதளவு வறுத்த எள் பொடியையும் கலந்தால் எலிகள் அதிக அளவில் கிட்டியில் விழும்.

பானைவழி புகை மூட்டம் இடுவதால் எலிகள் அதன் குஞ்சுகளுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக (3 முதல் 5 நிமிடங்களில்) இறக்கின்றன. எலிகள் மேலும் அதிக அளவில் காணப்படும் போது ஜிங்க்பாஸ்பைடு நச்சு மருந்தினைப் பயன்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள எலிகளைக் கட்டுப்படுத்த வார்ப்பரின் பயன்படுத்தலாம். எலியினுடைய சேதமே காணப்படாத வரையில் நச்சுணவைத் தொடர்ந்து வைப்பது அவசியம். எலிகளுக்கு நச்சுணவை வைத்துக் கொண்டிருக்கும் அதே நாட்களில் எலி வளைகளில் அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளையும் இட்டு நச்சுப்புகை யூட்டி எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வயல்களிலும், வரப்புகளிலும் T வடிவக் குச்சிகளை நட்டு வைத்தால் ஆந்தை போன்ற பறவைகளை இரவு நேரங்களில் கவாந்து அவற்றின் மூலம் எலிகளைக் கொல்லலாம். கோடை மாதங்களில் வயல்களில் உணவுப்பொருட்களே இல்லாத சூழ்நிலையில் எலிகள் நச்சுணவை எளிதில் உண்ணுகின்ற பக்குவத்தில் இருக்கும். ஆகவே முன்னர் கூறிய முறையில் கூட்டு முயற்சியோடு நச்சுணவு வைத்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். மேற்கூறிய கட்டுப்பாட்டு முறைகளைத் தனித்தனியாக மேற்கொள்ளாமல் ஒருங்கிணைந்த வகையில் ஒரு கிராமத் திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு ஒற்றுமையான முறையில் சமுதாய நோக்குடன் கடைபிடித்தால் எலிகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.

நெல் வளர்ப்பு ஙஎ 09006 (சீரகசம்பா) : வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை. இந்த புதியவார்ப்பு எல்லா பருவத்திற்கும் ஏற்றது. வயது 125 - 130 நாட்கள். எக்டருக்கு 6000 கிலோ தானிய மகசூல் கொடுக்கவல்லது. இதன் உருவாக்கம் ஏ.டி.டி. 43/ சீரகசம்பாவின் இனக்கலப்பு மூலம்.

சிறப்பியல்புகள் : நாட்டு சீரகசம்பாவை விட சன்னரகம், இரண்டு மடங்கு மகசூல் அதிகம். குறைவான விதைநெல் (ஏக்கருக்கு 1 கிலோ) போதும். குறைவான நீர் தேவை. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மை, SRI முறை நடவுக்கு ஏற்றது. அதிக தூர்கட்டும் தன்மை அதிக நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை, குறைந்த உயரம் (90செ.மீ), சாயாத தன்மை, பிரியாணி, குஸ்கா, தக்காளி சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்ச சாதம், சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல் செய்வதற்கு ஏற்ற இரகம்.

முன்னோடி விவசாயிகளின் பண்ணைத்திடல் - எஸ்.சிவசாமி, காரியாபட்டி (90038 48444), கே.பாண்டியன், ஜெயமங்கலம் (9150250135).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us