
குடம்புளி : உலக வர்த்தக அரங்கில் முதல் முறையாக குடம்புளி (KOKUM) வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடம்புளியை சான்ட் (SANT) என்று குறிப்பிடுகின்றனர். இது Santulan என்பதன் சுருக்கமாகும். குடம்புளியின் முக்கிய குணம் சமப்படுத்துவதாகும்.
DO IT YOURSELF என்ற பெயரில் அறிமுகமாகின்ற இந்த பானம் இரசாயனகலப்பற்றதும், தயாரிப்பதற்கு மிக எளிதானதுமாகும்.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு சொந்தமான இந்த பழம் மருத்துவ குணமுடையது. இது உடலில் கொழுப்புச்சத்தை சேர விடாது. உடல் பருமனைத் தடுக்கும். குடம்புளியில் ஆக்சிஜன் சிதைவதைத் தடுக்கும் இரண்டு காரணிகளை 'கார்சினோல்' மற்றும் சாந்தோனெஸ் ஆகியவை உள்ளது. இதில் கார்சினோல் மற்றும் சாந்தோனெஸ் ஆகியவை உள்ளது. இதில் கார்சினோல் புற்று நோயைத் தடுக்கும் தன்மையும், ஜீரண சக்தியைத் தூண்டும் திறமையும் கொண்டது. சாந்தோனெஸ் இதயத்தை வலுப்படுத்தும் வேலையைச் செய்கிறது.
கொங்கன் மற்றும் கர்நாடகத்தில் உத்ர கன்னடா பகுதியில் அதிக அளவில் விளைகிறது. கொங்கன் பகுதியில் மட்டும் சுமார் 1000 எக்டரில் குடம்புளி பயிராகி வருகிறது. குடம்புளியின் அறுவடைக்காலம் மே - ஜூன் மாதத்தில் பருவமழை பெய்து வருவதால் இதனைப் பக்குவமாக அறுவடை செய்து சேகரித்து வைத்து பதப்படுத்தி பயன்படுத்துவதற்கு பல பிரச்னைகள் உள்ளன.
THE WESTERN GHATS KOKUM FOUNATION (WGKF) எனும் தன்னார்வ நிறுவனம் 2001 முதல் உலக அளவில் குடம்புளியின் சிறப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை மூன்று சர்வதேச கருத்தரங்குகளை நடத்தியும், குடம்புளி தொடர்பான புத்தகத்தை வெளியிட்டும் உள்ளது. கேரளத்தில் காசர்கோட்டிலுள்ள டாக்டர் டி.சந்திர சேகர் சௌட்டி கூறும்போது, குடம்புளி விவசாயியான நான், குடம்புளி ஜூஸ் பருகத் தொடங்கியது முதல் என்னுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்கிறார். கேரளத்தில் மீன் குழம்பு செய்யும்
போது இது முக்கிய சேர்மானமாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. (தகவல் : ஆங்கிலத்தில் ஸ்ரீபத்மா, காசர் கோடு- தமிழில் எஸ்.பழனிச்சாமி (போடி சிவாஜி) ஸ்பைசஸ் இந்தியா, ஆகஸ்ட் 2014, செல் : 095667 99911)
மானாவாரி நெல்லியில் நிலப்போர்வை மூலம் மகசூலை அதிகரித்தல் : மானாவாரி பெருநெல்லி சாகுபடி முறையில் பழமரப்பயிரின் தண்டுப்பகுதியை நோண்டு அமைக்கப்பட்ட 5 சதம் சரிவுடன் கூடிய வட்டக் குழிகளில் 500 காஜ் தடிமனுடைய கருப்புநிற பாலிதீன் விரிப்புகளை நிலப்போர்வையாக அமைக்கும் பொழுது 32.2 சதம் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கும் பயிர் வினையியல் காரணிகளான இலைநீரின் அளவு, பச்சையம் தாங்கும் திறன், புரோலின் புரதம் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் செயல்பாடு ஆகியவை அதிகரித்து காணப்பட்டது. பாலிதீன் விரிப்பின் விலை ரூ.160.
மகசூல் - நிலப்போர்வை அமைக்கப்பெறாத சாதாரண முறை - 14.5 கிலோ / மரம் / வருடம்
நிலப்போர்வை அடைத்துப்பெற்ற மகசூல் - 18.9 கிலோ / மரம் / வருடம்
தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.
ஏ.பி.கே.1 சீத்தா : இந்த சீத்தாப்பழ மரத்தின் சிறப்பியல்புகள் வறட்சியைத் தாங்கி வளரும். நடுத்தர மற்றும் இதய வடிவம் கொண்ட பழங்கள், மகசூல் - 15 கிலோ / மரம், பழ எண்ணிக்கை 72 / மரம், பழ எடை 208 கிராம் / பழம். மொத்த கரையும் சர்க்கரை அளவு- 24.5 டிகிரி பிரிக்ஸ். தகவல்: மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.
கத்திரியில் ஊடுபயிர் : கத்திரி ஒரு பிரச்னையான பயிர் நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு. கத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை. இதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம். 5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும். பூச்சி தாக்குதல் குறையும்.
முட்டைகோஸ் : செடிகளை வைர முறுகு அந்து பூச்சி அதிகம் தாக்கும். 25 வரிசைக்கு 2 வரிசை கடுகுச் செடியைப் பயிரிட்டால் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்க முடியும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

