sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : அக் 29, 2014

Google News

PUBLISHED ON : அக் 29, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அற்புத பானம் : எளிய முறையில் நாமே தயாரித்து பருகக்கூடிய பானம். இந்த பானத்தை குடித்தால் உண்டாகும் நன்மைகள் - உடலில் கேன்சர் உருவாக காரணமாக உள்ள செல்களை வளர விடாமல் தடுக்கும். கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் தொடர்பான நோய்களைத் தடுக்கும். நுரையீரலைப் பலப்படுத்தி மாரடைப்பையும் அதிகமான இரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலை அகற்றும். மாதவிடாய் வலியினை குறைக்கும். தூசிகளால் ஏற்படும் காலை நேரத் தும்மல் மற்றும் அது தொடர்பாக வரும் பிரச்னைகளைத் தீர்க்கும்.

இதை அருந்துவதால் பக்கவிளைவுகள் எதுவுமில்லை. உடல் எடை குறைப்பிற்கு பயன்படுத்தலாம். இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதை உணரலாம். இதை தயாரித்த உடனே குடித்து விட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள் : காரட்-1, பீட்ரூட்-1, ஆப்பிள்-1.

இந்த மூன்றையும் சுத்தமாக கழுவியதும் தோல் சீவாமல் சிறு துண்டுகளாக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். பின் வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். சற்று சுவை வேண்டுவோர் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதை 4 பேர் அருந்தலாம்.

எப்போது குடிப்பது : சாறு எடுத்த உடனே காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை அருந்தியதும் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உட்கொள்ளலாம். தினமும் இரண்டு வேளை பருகலாம். அதாவது காலையிலும், மாலையில் ஐந்து மணிக்கு முன்பாகவும் பருகலாம்.

தமிழாக்கம் செய்தது. எஸ்.பழனிச்சாமி, 95667 99911, ஸ்பைசஸ் இந்தியா, செப்டம்பர் 2014. தகவல்: 'பூர்வீகம் ஆய்வு அறக்கட்டளை' இது புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாரம்பரிய மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கான பாலமாக செயல்பட்டு வரும் இயக்கம்.

துளசி சாகுபடி : மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கவுன்சில் பார் எண்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அமைப்பைச் சேர்ந்த எம்.ஜெயக்குமார் விவரிக்கிறார். துளசியை மூலிகையின் ராஜா என்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆன்மிக ரீதியாக துளசிக்கு தனி மரியாதை உண்டு.

சமீபகாலமாக இந்த அமைப்பு துளசி சாகுபடி ஊக்குவித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதி யில் சில விவசாயிகள் சாகுபடி செய்துள்ளார்கள். ஒரு ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்தால் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு டன் துளசி இலைகள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 10 முறை அறுவடை செய்யலாம். தற் போது பச்சைத் துளசி கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 டன் மூலம் 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

வாரம் ஒருமுறை நீர்ப்பாய்ச்சினால் போதும். பூச்சி நோய் தொல்லை இருக்காது. இயற்கை உரங்கள் கொடுத்தால் போதும். விற்பனை வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. டாபர் ஹிமாலயா போன்ற நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. இந்த நிறுவனத்தின் பணி துளசி சாகுபடிக்கு உண்டான தொழில்நுட்பங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பயிற்சி கொடுப்பது. தொடர்புக்கு செல்: 94875 59345.

ஒருங்கிணைந்த பயிரூட்ட நிர்வாகம் : பயிருக்குத் தேவையான ஊட்டங்களை அங்கக உரங்கள் (பசுந்தாள் உரங்கள், தொழு உரம், கம்போஸ்ட்), மண் ஆய்வின் அடிப்படையில் அமைந்த சமச்சீர் இரசாயன உரபயன்பாடு, உயிர் உரங்கள் மூலம் ஒருங்கிணைந்து அளிப்பது ஆகும். இதனால் பயிருக்குத் தேவையான ஊடகங்களைத் தேவைக்கு ஏற்ப சீராக கொடுப்பதுடன் இரசாயன உரங்களின் செலவினை குறைக்கலாம். இதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் குணங்கள் மேம்படுகின்றன.

உயிரியல் முறையில் மண்ணிலுள்ள கன உலோக நச்சுத்தன்மை நீக்குதல் : தற்போதைய காலகட்டத்தில் கடைப்பிடித்து வரும் ஒரு தொழில்நுட்பம். இந்த முறையில் கனி நச்சுக்களை முற்றிலுமாக அகற்றி விட முடியும். முருங்கை, ஆமணக்கு, நீலகிரி தைல மரம், சாமந்தி ஆகிய தாவரங்கள் காரீய நச்சையும், சவுக்கு, அவரை, சிறுகீரை, நீர்புல், சாமந்தி அகியவை நிக்கல் நச்சையும் நீக்குகின்றன. அவரை, சிறுகீரை, கம்பு, தீவனப்பயிர், சவுக்கு மரம் ஆகியவை காட்மியம் நச்சையும், அவரை, ஆமணக்கு, சவுக்கு, நீர்ப்புல் ஆகியவை குரோமிய நச்சையும் நீக்குவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தகவல்: முனைவர் கு.இராமசாமி, துணை வேந்தர், த.வே.ப. கழகம், கோயம்புத்தூர்-641 003.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us