தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : அக் 27, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

மண்புழு உரம்: ஆட்டு எருவைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. ஆட்டு எருவினை மண்புழு உண்டு செரித்த கழிவுகள் வெளிவரும்போது அவற்றின் பயன்படக்கூடிய சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. நாம் வளர்க்கும் ஆடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மண்புழு உரத்திற்கு தொட்டிகளை கட்டி ஆட்டு எரு மூலம் மண்புழு உரத்தினை தயாரித்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதோடு பிற பண்ணைகளுக்கும் விற்று லாபம் ஈட்டலாம்.

பால்கோவா-கோவா பொருட்கள் தயாரித்தல்:

5 லிட்டர் பாலைச் சுண்டக் காய்ச்சும்பொழுது 1 கிலோ கோவா கிடைக்கும். 5 பங்கு கோவாவுடன் ஒரு பங்கு சர்க்கரையைச் சேர்த்தால் பேடா கிடைக்கும். ஏலக்காய் மற்றும் குங்குமப் பூவையும் சேர்க்கலாம். 5 பங்கு கோவாவுடன் 1 பங்கு சர்க்கரையை பாகாகச் சேர்த்து சூடு செய்தால் பர்பி கிடைக்கும். ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவையும் சேர்க்கலாம். கலாகந்த்:பால் கொதிவந்த 15நிமிடத்தில் 5 லிட்டர் பாலுக்கு 1 கிராம் சிட்ரிக் அமிலத்தை 100 மிலி தண்ணீரில் கரைத்துப் பால் சிறிதளவு திரியும்வரை ஊற்ற வேண்டும். சுண்டி கெட்டியானபிறகு 5 லிட்டர் பாலுக்கு 500 கிராம் சர்க்கரை சேர்த்து சூடு செய்தால் கலாகந்த் கிடைக்கும். பால் சாக்லேட்: பால் கொதி வந்த 15 நிமிடத்தில் 5 லிட்டர் பாலுக்கு 100 கிராம் கோகோ பவுடர் 500 கிராம் சர்க்கரை மற்றும் 100 கிராம் வனஸ்பதி சேர்த்து சூடு செய்தால் பால் சாக்லேட் கிடைக்கும். குல்பி: 10 லிட்டர் பாலை 5 லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதில் 750 கிராம் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து ஆறிய பிறகு குல்பி கப்களில் ஊற்றி மூடவேண்டும். இதை 5 பங்கு ஐஸ் மற்றும் 1 பங்கு உப்பு உள்ள குடத்தில் போட்டுக் குலுக்கி உறையவைத்தால் குல்பி கிடைக்கும்.

-டாக்டர் எஸ்.தரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us