தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : நவ 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வறட்சியைத் தாங்கும் தென்னை - ''ஆழியார் நகர் 1'' - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வெளியீடான ஆழியார் நகர்-1 தென்னை ரகம் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றது. ஐந்தாவது ஆண்டில் பாளைவிடும். இந்த தென்னை ஆண்டுக்கு 125 காய்களைத் தரவல்லது. அதிக அளவு விளைச்சலாக ஒரு எக்டருக்கு 2.88டன் கொப்பரையைத் தரும். காண்டாமிருக வண்டு, செதில் பூச்சி, சிவப்புக் கூன்வண்டு தாக்குதலைச் சமாளிக்கும் இயல்புடையது. இப்புதிய ரகம் விற்பனைக்கு உள்ளது. ஒரு கன்று ரூ.30/-.   தொடர்புக்கு: 04253-288 722/ 288 662.

மாவுப்பூச்சிகளை ஒழிக்கும் புதிய ஒட்டுண்ணிகள்: மாவுப்பூச்சிகளை ஒழிக்க அதன் எதிரியான 'என்கிரட்' என்ற குளவி இனத்தைச் சார்ந்த 'அசிரோபேசஸ் பப்பாயே', 'அனாகைரஸ் லாக்கி', 'சூடுலெட்டோ மேஸ்டிக்ஸ் மெக்சிகானா' என்ற மூன்று ஒட்டுண்ணிகள் மெக்சிகோ நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள் மாவுப்பூச்சிகளை அடியோடு அழிக்கும் வல்லமை உடையவை. இந்த ஒட்டுண்ணிகளை பயிரில் விடுவதற்கு பின் வரும் முறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒட்டுண்ணி விடுவதற்கு மாவுப்பூச்சியின் தாக்குதல் மிதமானது முதல் அதிகமானது வரை இருத்தல் வேண்டும். ஒட்டுண்ணியை வயலில் விட்டபிறகு பூச்சிமருந்து தெளிப்பதைக் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஒட்டுண்ணி விட்ட வயல்களில் மாவுப்பூச்சி தாக்கிய களைகளை அகற்றுதல் கூடாது.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us