PUBLISHED ON : நவ 17, 2010
தரைப்பகுதியில் ஏல விவசாயம்: பசுமை சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே சொந்தமாகிப்போன ஏலக்காய் இப்பொழுது மலையைவிட்டு தரைக்காட்டிலும் காய்க்கத் தொடங்கிவிட்டது.
கேரளத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டம் காக்கூர் என்னும் இடத்தில் காஞ்சிராப்பள்ளி மனை என்னும் முகவரியில் வசிக்கும் நாராயணன் நம்பூதிரி மற்றும் பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகிய இருவரும் ஒரு ஆய்வு நோக்கத்தில் மலபார் ரக ஏல நாற்றுகளை ஸ்பைசஸ் போர்டின் நாற்று பண்ணையில் பெற்று தங்களின் வீட்டுத் தோட்டத்தில் நட்டு பராமரித்து வந்துள்ளனர். இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த தாய்ச்செடிகளில்இருந்து 40 தூர்களைத் தோண்டி அத்தோட்டத்திலுள்ள மா, பலா மற்றும் அஞ்சலி மரங்களின் அடியில் நட்டுள்ளார். 8 அடி இடைவெளியில் நடவு, மீண்டும் முதல் 35 தூர்கள் விட்டு செழித்து வளர்ந்திருந்தது. எவ்விதமான கவனிப்புமின்றி தானே வளர்ந்த ஏலச்செடிகள் இரண்டாமாண்டின் இறுதியில் பலன்தரத் தொடங்கின. நட்ட சமயத்தில் சாணி உரம் மற்றும் மக்கிய உரங்கள் மட்டுமே போடப்பட்டது. கோடை காலத்தில் மட்டும் நீர்ப்பாசனம் செய்து தரப்பட்டது. இதோ இன்று ஒவ்வொரு செடியும் 20 முதல் 22 வல்லிகளுடன் சராசரியாக 200 பழங்களுடன் காய்த்திருக்கின்றன. சிறிய வடிவிலான பழங்கள் 10-11 விதைகள் காணப்படுகின்றன. உலர்த்தியபோது 250 முதல் 300 கிராம் ஏலக்காய் கிடைத்துள்ளது. ஒரு குடும்பத்துக்குத் தேவையான ஏலக்காய் போதுமானது தரைப்பகுதியில் கிடைக்கின்றது. (தகவல்: ஜோன்சி மணித்தோட்டம், முதுநிலைக் கள அதிகாரி, ஸ்பைசஸ் போர்டு, சாந்தன்பாறை)
ஒப்பந்த அடிப்படையில் பால் காளான் வளர்ப்பு: காளான் வளர்ப்பிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அனைத்து விசேஷங்களுக்கும் பால்காளான் கிடைக்கும். பண்ணையில் நேரடி விற்பனை செய்யப்படுகிறது. துல்லிய தொழில்நுட்ப முறையில் பால்காளான் வளர்ப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 90955 55677, 97505 55677, டெய்லி மஷ்ரூம்ஸ்.
சோலார் மின்வேலி - ஹைடெக் ஐபெக்ஸ்: ஆடு மாடுகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைப்பது சிறந்தது. தொடர்புக்கு ஹைடெக் சோலார் சிஸ்டம்ஸ், 235, காமராஜர் சாலை, சப் ரெஜிஸ்டிரார் அலுவலக மாடியில், உப்பிலிபாளையம் போஸ்ட், கோயம்புத்தூர்-641 015. 0422-645 1890, மதுரை, திருச்சி, தஞ்சாவூர்- 98422 68770, திண்டுக்கல், தேனி- 98949 66655; சேலம், தர்மபுரி, நாமக்கல் - 94425 48770; கோவை, ஈரோடு- 98422 38770; சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்- 98422 48770.
