தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/அதிக லாபத்துக்கு ""ஜீரோ பட்ஜெட்'' சின்னவெங்காயம்

அதிக லாபத்துக்கு ""ஜீரோ பட்ஜெட்'' சின்னவெங்காயம்

அதிக லாபத்துக்கு ""ஜீரோ பட்ஜெட்'' சின்னவெங்காயம்


PUBLISHED ON : நவ 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

''சாம்பார் வெங்காயம்'' என்றுஅழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மகசூல் கண்டு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசினாம்பாளையம் விவசாயத் தம்பதியினர் சுப்பிரமணியம் - வஞ்சிக்கொடி.

சுப்பிரமணியம் சாகுபடி முறை பற்றி சொல்லத் தொடங்கினார்.  சின்னவெங்காயத்தின் மொத்த வயது 60 முதல் 70 நாட்கள். வடிகால் வசதியுள்ள மணல் கலந்த, செம்மண் நிலங்களில் நல்ல மகசூல் கொடுக்கும். இரண்டு மூன்று உழவு போட்டு நிலத்தை பொலபொலப்பாக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக, அரை ஏக்கருக்கு மூன்று டன் தொழுஉரத்தை இறைத்துவிட்டு உழவு செய்ய வேண்டும் (இவருடைய நிலம் ஏற்கனவே மேய்ச்சல் நிலமாக இருந்ததால், கால்நடைகளின் கழிவுகள் நிலத்தில் மண்டிக் கிடக்கின்றன. அதோடு செடி, கொடிகளையும் மடக்கி உழுததால் தனியாக அடியுரம் எதுவும் போடப்படவில்லை). பிறகு, ஏர் மூலமாக ஓர் உழவு போடவேண்டும். இரண்டு அடி இடைவெளியில் பார் அமைத்து, பாத்தி நிறைய தண்ணீர் பாய்ச்சி, தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அரையடிக்கு ஒரு காய் வீதம் வெங்காயத்தை ஈர நடவு செய்ய வேண்டும் (நாற்று உற்பத்தி செய்தும் நடலாம்). அரை ஏக்கருக்கு 250 கிலோ விதை தேவைப்படும். அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் இருப்பு வைக்கப்பட்ட, நேர்த்தி செய்யப்பட்ட விதை வெங்காயம் விவசாயிகளிடமே கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பத்து நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். அதைத்தவிர, வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை. 15, 30, 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்துவந்தால், பயிர் நன்றாக பச்சை பிடித்து, 45 நாட்களுக்குப் பிறகு காய் பெருக்கத் தொடங்கும். பச்சை பிடித்து நிற்கும் தாள்கள் வெளுத்துப் போய் கீழே சாயும் சமயத்தில் (55-60 நாட்கள்) அறுவடையை ஆரம்பிக்கலாம்.

''வெங்காயம் சீக்கிரமா அழுகிப் போற பொருள். அதனால, பட்டுனு விதைச்சோம், சட்டுனு அறுத்தோம்னு வித்துடணும். அதுலயும் ரசாயனம் போட்டு வளர்த்த வெங்காயமாக இருந்தா 10 நாள்ல கெட்டுப் போயிடும். பட்டறையெல்லாம் போட்டு பாதுகாப்பு பண்ணித்தான் விக்க முடியும். ஆனா, ஜீரோ  பட்ஜெட்ல விளைஞ்ச வெங்காயத்தை பட்டறை போடாம வெச்சுருந்தாலும், மூணு மாசம் வரைக்கும் அழுகாது. அதனால்தான் அறுவடை செஞ்ச வெங்காயத்தை ஒட்டுமொத்தமாக விக்காம, தினமும் கொஞ்சம் கொஞ்சமா கொண்டு போயி உழவர் சந்தையில விக்க முடியுது. இன்னிய தேதியில் கிலோ 14 ரூபாய்னு விலை போயிக்கிட்டிருக்கு. நான் மாசிப்பட்டத்துல போட்டிருந்தேன். பொதுவா வெங்காயத்துக்கு ஏத்தது வைகாசி, கார்த்திகைப் பட்டங்கதான். சிலுசிலுனு வீசுற ஈரக்காத்து, மிதமான தட்பவெப்பம் அப்பப்ப கிடைக்கிற சாரல் மழை எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிடைக்கும். அதுலயே பயிர் நல்லா வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மாசிப்பட்டத்துல போட்டதும்கூட மகசூல் குறைஞ்சதுக்குக் காரணம். இப்ப வைகாசிப் பட்டத்திலயும் நடவு செய்யப்போறோம். நிச்சயமா கூடுதல் மகசூலை அள்ளப்போறோம்'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். 

எம்.அகமது கபீர், வேளாண்மை நிபுணர், 93607 48542.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us