
மதுரா பவுல்ட்ரி புராடக்ட்ஸ்: சரியான முதலீட்டில் நிரந்தர வருமானம் பெற காடை, நாட்டுக் கோழி, வான்கோழி வளர்ப்பில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள பண்ணையாளர்கள் அல்லது 1500-2000 சதுர அடியில் உள்ள பண்ணைகள் உள்ளவர்களுக்கு பண்ணை அமைக்கும் முறைகள், அதன் தொழில்நுட்பம் மற்றும் பிராய்லர் காடை உற்பத்தி மற்றும் விற்பனை ஆலோசனைகளும் பெறலாம்.
விற்பனைக்கு கிடைக்கும் விபரங்கள்: காடை, நாட்டுக் கோழி, வான்கோழி குஞ்சுகள் (ஒருநாள் வயது), கின்னிக்கோழி, வான்கோழி குஞ்சுள் (ஒருநாள் வயது), தீவன வகைகள் (காடை மற்றும் கோழிகளுக்கு), பண்ணை உபகரணங்கள் (தண்ணீர், தீவன தட்டுகள்), புரூடிங் (இளம் குஞ்சு பராமரிப்பு) வளையம், காடை கேஜ்கள்.
கூட்டு ஒப்பந்த முறை அண்ட் பண்ணையாளர்களின் சொந்த விற்பனை வாய்ப்பு அவர்களின் தனிச்சிறப்பு. தொடர்புக்கு: 84894 88770, 91594 63816. மதுரா பவுல்ட்ரி புராடக்ட்ஸ், 4/58, நெடுங்குளம் ரோடு, ரிங்ரோடு ஜங்ஷன், சிந்தாமணி, மதுரை-9.
பிராய்லர் காடை பண்ணை: ஒரு சதுர அடிக்கு செலவு ரூ.150. வருடாந்திர பேட்சுகள் 8 முதல் 10. கிலோவுக்கு வருமானம் ரூ.12 முதல் 16 வரை. இடவசதி: ஒரு சதுர அடிக்கு 6 காடை (10 சதுர அடிக்கு 60 காடை). ஒரு சதுர அடி வருமானம் ஒரு சதுர அடி காடை ரூ.1 து 6 து 2 = 12ரூ. பேட்சுகள் 8.5 து ரூ.12 - 102/12 - 8.50ரூபாய் (மாதத்திற்கு). ஒரு சதுர அடிக்கு வளர்ப்புச்செலவு - 6 து 16 = 96ரூ. விற்பனை வாய்ப்பு - சொந்த விற்பனை சுலபம். தொழில் அனுபவம் - தொழில்நுட்பம் அவசியம். நிகர வருமானம் மாதத்திற்கு - 1000 சதுர அடியில் கிடைக்கும் வருமானம் ரூ.8500/- எதிர்கால வாய்ப்புகள் - நுகர்வோரின் தேவை, சுவை மற்றும் விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஒருவர் ஒரு காடையை முழுவதுமாக உண்ணலாம். கோழிக்கு மாற்றான உணவு காடை மட்டுமே.
வெட்டிவேர் அபிவிருத்தி பண்ணை: வெட்டிவேர் பவுடரை ஒரு குடம் தண்ணீருக்கு 5 கிராம் அளவு எடுத்து ஒரு பருத்தி நூல் துணியில் இறுக்க பிண்ணி பொட்டலமாய் கட்டி இரவு முழுவதும் போட்டு மறுநாள் காலை முதல் இரவு வரை அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தால் தாகம் தணியும். உடல் குளிர்வடையும். நறுமணம் தரும். தண்ணீர் அதிகம் பருகுவதைத் தூண்டும். வெட்டிவேர் பவுடரை தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கசாயமாய் குடித்துவர சர்க்கரை நோய் கட்டுப்படும். புற்றுநோய், பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்களால் ஏற்படும் நோய்களை, வெட்டிவேர் கசாயம் குடித்துவந்தால் தடுக்கலாம்.
அதிக பரப்பளவு உள்ள தரிசு நிலங்களை சீர்செய்து வளமான பண்ணையாக நிர்மானித்துதர ஆலோசனையுடன் அரசாங்க சலுகைகளுடன் நிர்மானித்து தருகிறார்கள். தொடர்புக்கு: சி.பாண்டியன், பி.காம்., சி.எம். விவசாய பண்ணை, (வெட்டிவேர் அபிவிருத்தி பண்ணை), குருவாடிப்பட்டி, கண்டக்காடு அஞ்சல், திருப்புத்தூர், சிவகங்கை. 96779 85574.
எரிசக்தி மர வளர்ப்பு திட்டம்: 'ஆரோமீரா' நிறுவனம் விவசாயக் கழிவுகளை எரிசக்தியாக உபயோகித்து நட, நாட்டின் மின்சக்தி தேவையை பூர்த்திசெய்ய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவி நடத்திவருகிறது. மின் உற்பத்தி நிலையங்கள் புதுக்கோட்டையிலும், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை அருகில் சண்முகபுரத்திலும் இயங்கி வருகின்றன. எரிசக்தி திறன் நிறைந்த மரங்களை தேர்வு செய்து அதை வளர்க்க முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு புதிய மரம் வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சூபாபுல், சவுக்கு, சுங்கினியானா, தைலமரம் மற்றும் மலைவேம்பு போன்ற குறுகிய காலத்தில் (4 வருடத்தில்) வறட்சியைத் தாங்கும் வல்லமை கொண்ட, மறுதாம்பு முறையில் வளரக்கூடிய வகைகள் பயிரிடப்பட்டு இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 95000 63058, 95000 63059, 95000 63076. தலைமை அலுவலகம்: ஆரோ மீரா எனர்ஜி கம்பெனி பிரைவேட் லிமிடெட், ஆரோ மீரா ஹவுஸ் எண்.29, ஷபி முகமது சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-600 006. போன்: 044-2820 9800.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

