முயல் வளர்ப்பு: செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், முயல் மற்றும் காடை வளர்ப்பு குறித்து, நாளை, நாளை மறுதினம் (ஆக., 8, 9) பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறுவடைக்கு பின் பயிற்சி: அதே பயிற்சி நிலையத்தில், தோட்டக்கலை பயிர்கள், அறுவடை செய்த பின், செயல்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து, 13, 14ம் தேதிகளில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்குபெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.
தொடர்புக்கு: 044 - 2745 2371
வாத்து வளர்ப்பு: காஞ்சிபுரம் அடுத்த, வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 8ம் தேதி, முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்: 044 - 2726 4019
நெல்லில் மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு: திருவள்ளூர் அடுத்த, திரூரில், வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 13, 14, 16 ஆகிய தேதிகளில் நெல்லில் மதிப்பு கூட்டிய பொருட்களான இட்லி மாவு, அவல், பொரி, இடியாப்பம், கொழுக்கட்டை மாவு, அரிசி நூடுல்ஸ், முறுக்கு மாவு உட்பட, பலவித பொருட்களை தயாரிப்பது குறித்து, தொழில் நுட்ப ஆலோசனை அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 044 - 27620705/9840950108

