/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விதை நெல், உரம் இருப்பு உழவன் செயலியில் காணலாம்
/
விதை நெல், உரம் இருப்பு உழவன் செயலியில் காணலாம்
PUBLISHED ON : ஆக 07, 2019
விவசாயம் தொடர்பாக, மொபைல் செயலியில், ஆலோசனை பெறலாம்.
இது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர், மு. அசோகன் கூறியதாவது:
சம்பா பருவத்தில், நெல், வேர்க்கடலை, ராகி உள்ளிட்ட பல வித வேளாண் பயிர்களை விவசாயிகள் பயிரிடலாம். சாகுபடி பருவத்திற்குரிய விதை நெல் மற்றும் உரம் இருப்பு நிலவரம் அறிந்து கொள்ளலாம்.
'கூகுள் - பிளே ஸ்டோரில்' சென்று, 'உழவன் செயலி' என டைப் செய்து, டவுன்லோடு செய்யவும்.
அதில் விவசாயி, தன் மொபைல் எண், மாவட்டம் மற்றும் வட்டாரத்தையும் பதிவிட வேண்டும்.
திரையில், விளைபொருளுக்குரிய மானிய திட்டம், பயிர் காப்பீடு விபரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், விளைபொருட்களின் சந்தை நிலவரம் குறித்து அறியலாம்.
வானிலை முன் அறிவிப்பு, அதிகாரிகளின் வருகை உள்ளிட்ட பல விபரங்களை காட்டும், நமக்கு தேவையானதை தேர்வு செய்து தெரிந்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 99943 56878

