நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கறவை மாடு வளர்ப்பு
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கறவை மாடு வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: 044 - 2726 4019
மசாலா பொடி தயாரிப்பு
செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மசாலா பொடி வகைகள் தயாரிப்பு குறித்து, இன்று மற்றும் நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதே பயிற்சி நிலையத்தில், நெல் மற்றும் பயறு வகை பயிர்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து, நாளை மற்றும் நாளை மறுநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371

