/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெல் வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மையின் வெற்றிக்கதை
/
நெல் வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மையின் வெற்றிக்கதை
நெல் வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மையின் வெற்றிக்கதை
நெல் வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மையின் வெற்றிக்கதை
PUBLISHED ON : ஜூன் 06, 2012

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வலச்சிக்குளம் கிராமத்தில் விவசாயிகளிடையே ஒருங்கிணைந்த எலி வேளாண்மை முகாம் நடைபெற்றது. நெல் நடவு வயலின் 15 சத குத்துகள் அல்லது 2 சத சிம்புகள் சேதமடைந்திருந்தாலும் கதிர் உருவாகும் முன் கீழ்க்காணும் எலிக்கட்டுப்õபட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
* வயலில் வரப்புகள் குறுகியதாக அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.
* எலிகள் மறைந்து தங்கி வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும் வைக்கோல்.
* போர்களையும் முள் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.
* கதிர் வெளிவரும் தருணத்தில் தஞ்சாவூர் வில் எலிக்கிட்டிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் வரப்பிலிருந்து 3மீ விட்டு கிட்டிக்கு கிட்டி 5 மீ இடைவெளியில் வைத்தல் வேண்டும்.
* எலிகளின் சேதம் அதிக அளவில் காணப்படும் போது ஜிங்க் பாஸ்பைடு அல்லது புரோமோடையலான் நச்சு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
* எலிகளின் இயற்கை விரோதிகளான பாம்பு, கீரி மற்றும் பறவை இனங்கள் போன்றவற்றைக் காக்க வேண்டும்.
* வயல்களிலும் வரப்புகளிலும் ஆங்கில டி வடிவ குச்சிகளை நட்டு வைப்பதால் ஆந்தை போன்ற பறவைகள் இரவு நேரங்களில் அமர்ந்து எலிகளைக்கொல்ல வகைசெய்யலாம்.
* கோடை மாதங்களில் வயல்களில் உணவுப் பொருட்களே இல்லாத சூழ்நிலையில் எலிகள் நச்சுணவை எளிதில் எடுத்துக்கொள்கிற பக்குவத்தில் நச்சுணவு எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
மேற்கூறிய கட்டுப் பாட்டு முறைகளைத் தனித் தனியாக மேற்கொள்ளாமல் ஒருங்கிணைந்த வகையில் ஒரு கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு சமுதாய நோக்குடன் கடைபிடித்தால் எலிகளை கணிசமாகக் கட்டுப்படுத்தலாம். எலி ஒழிப்பு முகாமில் நச்சுணவு வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது.
எலிக்கொல்லி நச்சுக்களை நேரடியாகப் பயன்படுத்தி எலிகளைக் கொல்ல இயலாது. எனவே இவற்றை உணவில் கலந்து எலிகளுக்குக் கொடுக்க வேண்டும். எலிகள் விரும்பி உண்ணும் பொரி, தானிய வகைகள் அல்லது கருவாடு(97 கிராம்), தேங்காய் எண்ணெய் (1 மில்லி) ஆகியவற்றுடன் ஜிங்க் பாஸ்பைடு (2 கிராம்) கலந்து உபயோகிக்க வேண்டும். இந்த நச்சுத்தீனியை வைப்பதற்கு முன் 2 அல்லது 3 நாட்களுக்கு நச்சு கலக்கப்படாத உணவை வைக்க வேண்டும். இவற்றை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைக்க வேண்டும். ஒரு இடத்தில் 15-20 கிராம் (3-4 தேக்கரண்டி) என்ற அளவில் வைக்க வேண்டும். எஞ்சியுள்ள எலிகளைக் கட்டுப்படுத்த புரோமோடையலான் தயார்நிலை மருந்தை பயன்படுத்தலாம். இம்முகாமில் வலச்சிக்குளம் கிராமத்திலுள்ள விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தகவல்: ஆர்.நளினி, முதன்மை ஆராய்ச்சியாளர், 99422 66709, விவசாயக்கல்லூரி, மதுரை.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

