sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

செம்மண்ணில் விளையும் தாய்லாந்து ஆல் சீசன் பலா

/

செம்மண்ணில் விளையும் தாய்லாந்து ஆல் சீசன் பலா

செம்மண்ணில் விளையும் தாய்லாந்து ஆல் சீசன் பலா

செம்மண்ணில் விளையும் தாய்லாந்து ஆல் சீசன் பலா


PUBLISHED ON : செப் 11, 2024

Google News

PUBLISHED ON : செப் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய்லாந்து ஆல் சீசன் பலா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.

அந்த வரிசையில், தாய்லாந்து ஆல் சீசன் பலா மரங்களை, நம்மூர் செம்மண்ணில் மட்டும் சாகுபடி செய்யலாம். இது, மூன்று ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.

இந்த பலா செடிகளை நடும் போது, தண்ணீர் தேங்காத மேட்டுப்பகுதிகளில் நட வேண்டும். அப்போது, தான் செடிகளின் சேதமும் தவிர்க்கப்படும். மரமும் செங்குத்தாக வளரும்.

குறிப்பாக, களர் உவர் நிலங்கள், களி மண் நிலங்களில், ஆல் சீசன் பலா மரங்களை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். இந்த பலா மரத்தில், ஆண்டு முழுதும் பலாப் பழங்கள் கிடைப்பதால், சீசன் இல்லாத நேரங்களிலும் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். ஒரு பலா பழத்தில் சுளைகள் அதிகமாக இருப்பதால், சந்தையில் விற்பனைக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: கே.சசிகலா,72005 14168.






      Dinamalar
      Follow us