தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பூலோக கற்பக விருட்சம்

பூலோக கற்பக விருட்சம்

பூலோக கற்பக விருட்சம்


PUBLISHED ON : செப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

03.பூலோக கற்பக விருட்சம்தமிழகத்தில் பச்சை இளநீர், செவ்விளநீர் என இரண்டு ரகங்கள் உள்ளன. செவ்விளநீர் காயில் இளநீர் பானம் மட்டுமே இருக்கும். பச்சை நிற இளநீர் காய்களில் பெரும்பாலும் உள்ள 'இளசு நுங்கு' போன்ற இன்னமுதமான படைப்பை வாயிலே இட்டால் தொண்டைக்குள் செல்வது தெரிவது இல்லை. அத்துடன் சுவை நீர் சுகமாகக் கிடைக்கின்றது. தென்னிந்தி யாவில் தமிழ்நாடு, கேரளாவில் மிக அதிகமான அளவிலே தென்னை மரம் காணப்படுகிறது.சிறகுகள் போன்ற கூட்டு இலைகளையும் கொண்டு ஏறத்தாழ நுாறு அடிகள் உயரம் வரை இந்த மரம் வளரும் தாவரமாகும். இதன் பாகங்கள் அனைத்துமே பயன்பாட்டில் உள்ளதால், இது 'பூலோகக் கற்பக விருட்சம்' என்றும் போற்றப்படுகிறது.இளமை தரும் இளநீர்

இளநீரில் சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, செம்பு, கந்தகம், குளோரைடு முதலான தாது உப்புக்கள் மிக அதிகளவிலே

உள்ளன. கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் சிறந்த குளிர்பானம் இளநீர்.இளம் காய், வழுக்கை, இளநீர்க்காய், முற்றிய தேங்காய் எனப்படும் 'ஓரோர்' அமைப்பிலும் சிறப்பான நன்மைகள் ஏராளம். பிரதான பகுதியாகிய இளநீர் தாகத்தை தணித்து சிறுநீரை தாராளமாக பிரியும்படி செய்கிறது. ஓரோர் காய் வீதம் இளநீரை தினமும் தொடர்ந்து அருந்தி வந்தால், தோல் மேம்பட்டு இளமையாக தோற்றம் தென்படும்.இளநீர் வகைகள்

வியத்தகு வகைகளில் இளநீர் காய்கள் உள்ளன. அவை ஆற்று இளநீர், கேணி இளநீர், புதிய இளநீர், அருவி இளநீர், அடுக்கு இளநீர், ஆயிரம் கச்சி இளநீர், மஞ்சள் கச்சி இளநீர், கரு இளநீர், சோரி இளநீர், காய்ந்த இளநீர் என பல ரகங்கள் உண்டு. இறுகிய இளநீர் காயின்

உள் பகுதியில் வழுக்கையும், சுவை நீரும், அரிய மருத்துவ குணங்களும் அமைந்துள்ளன. ''காணி நிலத்தில் பசுங்கீற்றும், இளநீரும் தரும் தென்னை மரம் பக்கத்திலேயே வேணும்,'' என்கிறார்

பாரதியார். ''இளநீ... இளநீ...'' என

காலை வேளையில் கூவிக்கூவி விற்கும்

வியாபாரியின் தெள்ளிய குரல் அதோ கேட்கிறது!

- முன்னோடி விவசாயி



எஸ்.நாகரத்தினம்,
விருதுநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us