sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி

/

மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரையில் விவசாயிகள் மகிழ்ச்சி


PUBLISHED ON : நவ 06, 2013

Google News

PUBLISHED ON : நவ 06, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் 4.9.2013ல் நெல் சாகுபடி துவங்கியது. எப்படி என்றால் பெரியார் அணை நிறைந்தது. இதனால் உபரி நீர் இருந்தது. உடனே கிடைத்த நீரினை வைகை அணைக்கு விவசாயத்திற்காக மாற்றப்பட்டது. மதுரையில் நெல் விவசாயம் தொடங்கியது. விவசாயத்தில் அனுபவம் பெற்ற எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகளை நெற்பயிரை நன்கு கவனிக்க வேண்டும் என்கிறார். முக்கியமாக பயிரில் சுத்தமாக களை எடுப்பது, பயிர் பாதுகாப்பு அனுசரித்தல், பயிருக்கு ஊட்டச்சத்துக்கள் அளிப்பது, இலை சுருட்டுப்புழுவை அழிப்பது, இதனை உடனே அழிக்க மானோகுரோட்டோபாஸ் 36 இசி 400 மில்லி/ஏக்கர் அல்லது குளோரிபைரிபாஸ் 200 மில்லி/ஏக்கர் இசி, 500 மில்லி/ஏக்கர் வீதம் தெளிக்க வேண்டும். இல்லாவிடில் பயிர் கீழே சாய்ந்து கதிர்களைப் பதராக்கிவிடும். உடனே வயலில் உள்ள தண்ணீரை சற்று வடித்து பயிருக்கு தெம்பு புடிக்க சிறிது யூரியா இடவேண்டும். சிறிது அசோலா உரம் இடலாம் என்றார். இந்த சிபாரிசு கொடுத்ததால் இன்று பயிர் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் வந்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

மதுரைக்கு அருகில் உள்ள காந்திகிராமத்தில் ஜே13 நெல் ரகம் அதிகப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. சாகுபடிசெய்த நெல் ரகங்கள் பல செழிப்பாக வந்திருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்தது ஜே-13 நெல் ரகமாகும். 100 நாளில் நெல் அறுவடைக்கு வந்தாலும் இதில் வைக்கோல் அதிகமாக உள்ளது. இதன் நெல் வரும் கார்த்திகை மாதத்திற்கு பொரி செய்வதற்கு மிகவும் ஏற்றது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த ஒவ்வொரு நெல்ரகத்திலும் என்ன மகசூல், லாபம், வருவாயை தெரிந்துகொள்ள வேண்டும். நெல்பயிரை ஆடு, மாடுகள் மேய்ந்துவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் கவனத்திற்கு: அறுவடைக்கு தயாராக இருந்த நெல் ரகங்கள் பல இருந்தபோதிலும் சில விவசாயிகள் தங்களது புதிதாக தயார் செய்யப்பட்ட நாற்றங்கால்களை இழந்து தவிக்கின்றனர். பிரச்னை தீர ஆடுதுறை 39 நெல் நட்டு விடலாம். இந்த நெல் நல்ல மகசூல் கொடுப்பதுடன் கணிசமான அளவு வைக்கோலும் கொடுக்கும். மேலும் மழை, பனி இவைகளால் ஆடுதுறை 39 நெல் பாதிக்கப்படுவதில்லை. ஆடுதுறை 39 ரகம் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம். இந்த ரகத்திற்கு ஒட்டுப்பொன்னி என்ற பெயரும் உண்டு. ஆடுதுறை 39 ரகத்தை கண்டிப்பாக வரிசை நடவு போடவேண் டும். இதில் கோனாவீடரை பயன்படுத்த வேண்டும். கோனா வீடர் நிலத்திலுள்ள களைச்செடிகளை பூமியில் அழுத்தி, பசுந்தாள் உரமாக்கிவிடுகின்றது. கோனோவீடருக்கு ஒரு தனி சக்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us