sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கற்பீர்

/

ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கற்பீர்

ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கற்பீர்

ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கற்பீர்


PUBLISHED ON : நவ 06, 2013

Google News

PUBLISHED ON : நவ 06, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் 1076 கி.மீ. நீள கடற்கரை இருக்கிறது. பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமாக கடல் இருக்கிறது. உள்நாட்டில் மக்கள் உண்பதற்காக மட்டுமல்ல, நாட்டுக்கு அன்னிய செலாவணி ஈட்டும் தொழிலுக்காக உயிரைப் பணயம் வைத்து மீன் பிடிக்கின்றனர். கட்டுமரம் தொடங்கி பல நூறு கோடி பெறுமானமுள்ள மீன்பிடி கப்பல் வரை மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் தமிழகத்தில் நன்னீர் மீன் வளர்ப்பும், அலங்கார மீன் வளர்ப்பும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இவற்றுக்குப் பயிற்சி தர தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், த.நா.மீன் வளர்ச்சிக் கழகம், கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் போன்றவை பணிபுரிகின்றன. இதற்கு நபார்டு போன்ற வங்கிகள் கடனுதவி, மானியம் அளிக்கின்றன.

ஆழ்கடலில் மீன் பிடிப்பது எப்படி என தூத்துக்குடி மீன் வளக் கல்லூரியிலும், சென்னை இந்திய அரசின் கடல்சார் மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனமும் பயிற்சி தருகின்றன. மரைன் பிட்டர், வெசல் நேவிகேட்டர், மீன்வள அறிவியல் ஆகிய பட்டப்படிப்புகள் சொல்லித்தருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் சேரலாம். வயது 16 முதல் 20க்குள் இருக்க வேண்டும்.

மிகக்குறைவான கட்டணம் வசூலிக்கின்றனர். ஸ்காலர்ஷிப் உண்டு. தங்கும் வசதி உள்ளது. தனியார் கப்பல் பணியாளர்கள், அரசு கப்பல் பணியாளர்களுக்கும் பயிற்சி தருகின்றனர். முழு விபரங்களுக்கு: மத்திய கடல்சார், மீன் வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், இந்திய அரசு, 59, என்.என்.செட்டி தெரு, ராயபுரம், சென்னை-13. போன்: 044-2595 2691/ 92/ 93. www.cifnet.gov.in

எம்.ஞானசேகர்,

தொழில் ஆலோசகர்,

93807 55629.






      Dinamalar
      Follow us