/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நவீன வேளாண்மையில் இயந்திரமாக்கலின் பங்கு
/
நவீன வேளாண்மையில் இயந்திரமாக்கலின் பங்கு
PUBLISHED ON : அக் 03, 2018

வேளாண்மைத் தொழிலில் ஆட்கள் பற்றாக்குறை ஒரு பிரச்னையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய வேளாண்மையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் பண்ணை பணிகளை எளிதாக்கவும், குறித்த காலத்தில் மேற்கொண்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும்,
விவசாயிகளின் நிகர லாபத்தினை அதிகரிக்கவும், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
டிராக்டர், பவர் டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், ரோட்டவேட்டர், விதை விதைக்கும் கருவி, உரமிடும் உழவில்லா விதைப்பு கருவி, உரத்துடன் விதை விதைக்கும் கருவி, டிராக்டரால் இயங்கக்கூடிய வரப்பு அமைக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி, நெற் பயிரில் களையெடுக்கும் கருவியினை உள்ளடக்கிய விசைக்களையெடுக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான் ஆகிய வேளாண் கருவிகள் ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது அரசு நிர்ணயித்த அதிகபட்ச மானியம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்துடன் வேளாண் நவீன தொழில்நுட்ப இயந்திரம் வாங்க விரும்புவோர் வேளாண் பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளரை அணுகலாம்.
தொடர்புக்கு : 94439 90964.
- த.விவேகானந்தன் துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.

