/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தக்காளி புள்ளி வாடல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
/
தக்காளி புள்ளி வாடல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தக்காளி புள்ளி வாடல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தக்காளி புள்ளி வாடல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
PUBLISHED ON : ஜூலை 24, 2019

தக்காளி பயிரில் புள்ளி வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். இந்நோய் தாக்குதல் வைரஸ் மூலம் தோன்றுகிறது.
அறிகுறிகள்: இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும். சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களில் கழுத்துப்பகுதி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகும். இந்நோயானது செடிப்பேன் மூலம் பரவும்.
மேலாண்மை: பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்து விட வேண்டும். தக்காளி விதைப்பதற்கு முன் விளை நிலங்களை சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
இமிடாகுளோபிரிட் 0.05 சதவீதம் அல்லது ஊடுறுவும் பூச்சி கொல்லிகளை தெளித்து நோய் பரப்பும் காரணியை கட்டுப்படுத்தலாம். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும்.மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்ற பல்வேறு வணிக பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தலாம்.
- முனைவர்.ரா.விமலா, தலைவர் பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்

