sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

உதயம் வாழை

/

உதயம் வாழை

உதயம் வாழை

உதயம் வாழை


PUBLISHED ON : ஜூன் 20, 2012

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் 'உதயம் வாழை' என்னும் ரகத்தினை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய ரகம் விவசாயிகள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகின்றது. புதிய ரகம் கற்பூரவல்லி ரகத்தை ஒத்தது. மற்றும் வயது ஒரு மாதம் குறைவு. மறுதாம்பிலும் நிலையான மகசூல். இலைப்புள்ளி நூற்புழு தாங்கி வளரக்கூடியது. சீப்புகளிடையே அதிக இடைவெளி. அதிக சர்க்கரைச்சத்து (31%). ஜுஸ், ஒயின் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட வாழை உட்பொருட்கள் தயாரிக்க ஏற்றது. ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் முனைவர் உமா விவசாயி களுக்கு புதிய ரகத்தின் கன்றுகளை கொடுத்துஅதன் சிறப்புகளை தெரிந்துகொள்ள அரும்பாடு பட்டுள்ளார்.

இவரிடம் கன்றுகளை வாங்கி நட்டு அதன் சிறப்புகளை நன்கு தெரிந்திருப்பவர் பிரபலவாழை விவசாயி எஸ்.சுந்தரம். (43, கடைவீதி, திருக்காட்டுப்பள்ளி - 613 104, தஞ்சாவூர்) இவர் வாழை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒத்துழைப்பு நல்கியதோடு தானும் விவசாயிகளை அணுகி உதயம் வாழையை சாகுபடி செய்யச் சொல்கிறார். இவர் விவசாயிகளை திசு வளர்ப்பு கன்றுகளை சாகுபடி செய்யச் சொல்கிறார். வெளியில் கிடைக்கும் கன்றுகளை வாங்கி நடுவது சரியில்லை என்கிறார். இதோடு இவர் சில குறிப்புகளையும் கொடுக்கிறார். வாழை நடுவதற்கு ஒரு மாதம் முன் நுண்ணுயிர் கலவை தயார் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல். தென்னை நார் கழிவோடு தலா நான்கு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து நிழலில் வைத்து லேசான ஈரப்பதம் இருக்குமாறு தினமும் தண்ணீர் தெளித்துவர வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் பன்மடங்கு உயரும். அதேபோல தேர்வு செய்து இருக்கும் நிலத்தை முன்கூட்டியே உழவு செய்து சணப்பு விதைகளை விதைக்க வேண்டும். இது உயரமாக வளரும். இதன்நிழலில்தான் வாழை நடவுசெய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 9 அடியும் மரத்திற்கு மரம் 9 அடியும் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து ஏற்கனவே தயார் செய்த நுண்ணுயிர் கலவையை தலா 3 கிலோ வீதம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவிற்குபின் மண்ணை நிரப்ப வேண்டும். பாசனம் கவனித்து செய்ய வேண்டும். நடவு செய்த 15ம் நாளிலிருந்து ஒரு அடி விட்டு சணப்பை அறுத்து வாழைக்கன்றுகளை சுற்றி மூடாக்கு போடவேண்டும். 20 நாட்கள் கழித்து சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும். வாழைக்கன்றுகள் வளர்ந்து வரும் போது வாழை நிபுணர்கள் சொல்லும் எரு, உரங்கள் இடவேண்டும். மரங்களின் மேல் நீரில் கரையும் உரங்களையும் ஒட்டு திரவத்துடன் தெளிக்க வேண்டும். விவசாயிகள் சிரமப்பட்டு நுண்ணூட்ட சத்து உரங்கள் போடவேண்டும். விவசாயிகள் நிபுணர்களை அடிக்கடி அணுகி விவரங்கள் பெற்று அதன்படி செயல்படவேண்டும். இதே போன்று பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்து வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும். பழ வெடிப்புகள் வரக்கூடாது. உதயம் வாழை சாகுபடி செய்து அனுபவம் பெறவேண்டும். புதிய ரகத்தின் சாகுபடி நுட்பங்கள் சற்று கடினமானது. உதயம் வாழையின் தார் ரூ.1,000 விலைக்கு போகின்றது. ஒரு தார் உற்பத்தி செய்ய மொத்த செலவு ரூ.350 ஆகும். நிகரமாக ஒரு தாருக்கு ரூ.650 கிடைக்கும். வியாபாரிகள் பயமில்லாமல் உதயம் வாழைத் தாரினை விற்கலாம். தமிழகத்தில் உயரம் ரகத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. விவசாயிகள் சாகுபடி முறைகளை கையாண்டு அதிக உற்பத்தி செய்யவேண்டும். நிபுணர்களிடம் குறிப்புகளை தெரிந்துகொண்டு சாகுபடி செய்ய வேண்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us