PUBLISHED ON : டிச 20, 2023

பாலுார் - 1 ரக பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் களி மண், செம்மண்ணுக்கு அனைத்து விதமான பழங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடி தோட்டங்களில், அனைத்து விதமான பழங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், பாலுார் - 1 ரக பலாப்பழச் செடிகளை, விவசாயிகள் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். இது, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரகம் என்பதால் உள்ளூர் மண்ணுக்கு அருமையாக வளரும்.
குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பலா பழமும், 8 - 10 கிலோ எடையில் கிடைக்கும்.
ஒவ்வொரு பலா சுளையும் பெரிதாக இருக்கும். அதிக வருவாய் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற ரகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 94455 31372.
