தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நல்ல ரகங்களை தேர்வு செய்தால் முலாம் பழத்தில் அதிக மகசூல்

நல்ல ரகங்களை தேர்வு செய்தால் முலாம் பழத்தில் அதிக மகசூல்

நல்ல ரகங்களை தேர்வு செய்தால் முலாம் பழத்தில் அதிக மகசூல்


PUBLISHED ON : டிச 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிர்ணி பழம் என அழைக்கப்படும் முலாம் பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் கு.ஜெயராமன் கூறியதாவது:

முலாம் பழம் செம்மண், மணல் கலந்த செம்மண், சவுடு கலந்த களிமண்ணில் சாகுபடி செய்வதற்கு உகந்தவை. மண்ணின் கார அமில தன்மை 7.5 சதவீதம் இருக்க வேண்டும்.

முலாம் பழ சாகுபடிக்கு ஏற்ப, பூசாசர்பதி, பூசாமதுரகஸ், அர்காஜீட், பஞ்சாப்சன், பஞ்சாப் ரசிலாஹரி, துர்காபுராமாது, அர்காராஜ்கான்ஸ் ஆகிய ரகங்களை தேர்வு செய்து, சாகுபடி செய்தால் நல்ல மகசூல் ஈட்ட முடியும்.

ஒரு ஏக்கர் விளை நிலத்தை நன்கு பண்படுத்திய பின், 20,000 கிலோ மட்கிய தொழு உரத்தை போட்டு, 2 அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். குறிப்பாக, முலாம் பழம் சாகுபடிக்கு, ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்கள் உகந்தவை. 1 ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது.

விதைப்பதற்கு முன், 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது 10 கிலோ சூடோமோனஸ் புளுரசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்களில் பாதுகாக்கலாம்.

இதன் மூலமாக, 25 சதவீதம் வரையில் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கு.ஜெயராமன்,

95974 42347.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us