தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/உப்பு படிமத்தை தேக்குவதற்கு உகந்தது கிணற்று பாசனம்

உப்பு படிமத்தை தேக்குவதற்கு உகந்தது கிணற்று பாசனம்

உப்பு படிமத்தை தேக்குவதற்கு உகந்தது கிணற்று பாசனம்


PUBLISHED ON : டிச 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணற்றில் தண்ணீர் சேமித்து, சாகுபடிக்கு வினியோகம் செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ப.அவினாஷ் கூறியதாவது:

சவுடு மண்ணில், பாரம்பரிய ரக நெல், கொய்யா, மா, தென்னை ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.

ரசாயன உரங்களின் பயன்பாடு தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி, நெல் மற்றும் பழங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

இதுதவிர, கிணற்று நீர் பாசனத்தை பயன்படுத்தி, சொட்டுநீர் வினியோகம் செடிகளுக்கு செய்து வருகிறேன்.

குறிப்பாக, சூரிய ஒளி சக்தி வாயிலாக, ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, கிணற்றில் சேமித்து வருகிறேன். இந்த திறந்தவெளி கிணற்றில் இருந்து, மின் மோட்டார்கள் வாயிலாக சொட்டு நீர் பாசனம் செய்து வருகிறேன்.

இதுபோல செய்யும் போது, ஆழ்துளை கிணற்றில் இருக்கும் உப்பு படிமம், அடி பகுதியில் தேங்கி பயிர் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. மேலும், கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: ப.அவினாஷ்

93443 45382.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us