/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் மண்ணிலும் ஆந்திரா ரக நெல்
/
நம்மூர் மண்ணிலும் ஆந்திரா ரக நெல்
PUBLISHED ON : ஜன 03, 2024

ஆந்திரா- ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:
பல வித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'ஆந்திரா- - 1638' ரக நெல் முதல் முறையாக, சம்பா பட்டத்தில், சாகுபடி செய்து உள்ளேன்.
இந்த நெல் நாற்று நடவு செய்து, 125 நாளில் அறுவடைக்கு வரும். ஒரு ஏக்கருக்கு, 35 நெல் மூட்டைகள் மகசூலுக்கு கிடைக்கும் என, ஆந்திர மாநில விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
இது, என்.எல்.ஆர்., ரக அரிசியை விட மிகவும் சன்னமாக இருப்பதால், அதிக விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
நம்மூர் களிமண் நிலத்தில், நேரடி விதைப்பு வாயிலாக, 'ஆந்திரா - -1638' ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
முளைப்பு திறனும் நன்றாக உள்ளது. அறுவடைக்கு பின், எவ்வளவு நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும் என, தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஆர்.தேவராஜ்,
87547 97918.