/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வருவாய்க்கு பஞ்சமில்லாத சிறகு அவரை சாகுபடி
/
வருவாய்க்கு பஞ்சமில்லாத சிறகு அவரை சாகுபடி
PUBLISHED ON : ஜன 03, 2024

சிறகு அவரை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜீவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா உள்ளிட்ட பல வித பழ செடிகளை நட்டுள்ளேன். வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன்.
அந்த வரிசையில், கம்பி வேலி மீது சிறகு அவரை சாகுபடி செய்துள்ளேன். இது, பாரம்பரிய ரக காய்கறிகளில், மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இது, சாகுபடி செய்த மூன்று மாதங்களில் மகசூலுக்கு வந்துவிடும்.
சிறகு அவரை பொருத்தவரையில், பீர்க்கன், சுரைக்காய் போல் நீளமாக காய்க்கும் காயாக உள்ளது.
இதை, காயாகவும் விற்பனை செய்யலாம். நேர்த்தி செய்து விதைகளாகவும் விற்பனை செய்யலாம்.
இரு விதங்களிலும், சந்தையில் வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,
89402 22567.